உலகம்

கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஒரு லட்சம் “மின்க்”களைக் கொல்ல முடிவு… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாட்ரிட்:-

நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் கொரோனா தொற்றுக்கு காரணமாக மின்க் (Mink) என்ற விலங்கை ஒரு லட்சம் எண்ணிக்கையில் கொல்வதற்கு அந்நாடுகள் உத்தரவிட்டுள்ளது. இதனைடுத்து அந்நாடுகளில் கிட்டத்தட்ட 10லட்சம் மின்க்குகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

கீரியைப் போலக் காணப்படும் இந்தக் கொறிக்கும் விலங்கு அங்குள்ள பண்ணைகளில் இதன் மென் மயிரை (Fur) சேகரிப்பதற்காக வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஸ்பெயினில் அரேகான் (Aragon) பகுதியில் உள்ள ப்யூப்லா ட வல்வெர்டே (Puebla de Valverde) பகுதியில் உள்ள மின்க் பண்ணையில் பண்ணை முதலாளியின்  மனைவிக்கு கடந்த மே மாதம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பண்ணை முதலாளி மற்றும் தொழிலாளர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் கடந்த ஜூலை 13ம் தேதி அங்கு வளர்க்கப்பட்ட 87% மின்க்குகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக பிராந்திய கால்நடை சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

ALSO READ  Tokyo Olympics: பாஸ்கெட்பால் விளையாடிய Terminator..!

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவுகிறதா என்று முடிவெடுக்க முடியாத நிலையில், பண்ணைகளில் உள்ள 92,700 மின்க்குகளை கொல்ல ஸ்பெயின் அரசு உத்தரவிட்டுள்ளது.

ரே காந்தி மாகாண விவசாய துறை அமைச்சர் ஜாக்வின் ஒலோனா (Joaquin Olona) கூறுகையில்:-

விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த மின்க்குகளை கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ஸ்பெயின் நாட்டின் அரேகான் மாகாணம் ஹாட்ஸ்பாடாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  'எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கு, இப்போ உங்களுக்கும்'... போலீசார் மீது வேண்டுமென்றேவஇருமிய இளைஞர்....

இதேபோல டென்மார்க் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதையடுத்து அந்த நாடுகளிலும் பத்தாயிரம் மிக்ன்குகள் கொள்ளப்படுவதற்காக தேர்வு செய்து (Culled) சேகரிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.

இதில் மனிதர்களிலிருந்து தான் இந்த மின்க்குகளுக்கு பரவியுள்ளது. ஆனால் இந்த விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாகக் இதுவரையில் எங்கும் பதிவாகவில்லை.

என்றைக்கு தான் இந்த மனிதர்கள் இந்த உலகமானது மனிதர்களுக்கு மட்டும் உரியது அல்ல! மற்ற விலங்குகளுக்கும் பொதுவானது என்பதை உணரப் போகிறார்களோ தெரியவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவில் புதிய வைரஸ் 7 பேர் பலி 60 பேர் பாதிப்பு… 

naveen santhakumar

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்?

Shanthi

சிறு பெண்ணுக்கு ஜெர்மனி அருங்காட்சியத்தில் சிலை…

Admin