உலகம்

நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் இணைந்து அனுப்பிய ராக்கெட் 19 மணிநேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஃப்ளோரிடா:-

எலான் மஸ்க்கின் “ஸ்பேஸ்-எக்ஸ்” தனியார் நிறுவனம் தயாரித்த டிராகன் ஃபால்கான் ராக்கெட் சனிக்கிழமை 2 அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், 19 மணி நேரப் பயணத்துக்குப் பின் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று அடைந்தது.

ப்ளோரிடாவில் உள்ள கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இரு அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சுமந்துகொண்டு அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3.22 மணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் ஃபால்கான் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

courtesy.

அவ்விரு அமெரிக்க விண்வெளி வீரர்கள் பாப் பெக்கென் (49), டாக் ஹர்லி (53) ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 19 மணிநேர பயணத்திற்கு சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தை அடைந்துவிட்டார்கள் என்று நாசா விண்வெளி நிலையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

விண்வெளி மையத்தில் அவர்களை அமெரிக்க விண்வெளி வீரர் கிறிஸ் காசிடி, விண்வெளி வீரர்களான அனடோலி இவானிஷின் மற்றும் இவான் வாக்னர் ஆகியோர் வரவேற்றனர், 

ALSO READ  இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு வேறு தந்தை அதிர்ச்சியில் உறைந்த தந்தை- நடந்தது என்ன ?? 
courtesy.

நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் ஹூஸ்டனில் பணி கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து  சர்வதேச விண்வெளி ஆய்வு குழுவினருடன் பேசினார்.

பாப் மற்றும் டக் நாட்டிற்காக நீங்கள் செய்த இந்த பணியை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று கூறினார். 

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் இந்த பணி அமெரிக்கர்களை ஊக்குவிக்கும் என்று தான் நம்புவதாக விண்வெளி வீரர் ஹர்லி கூறினார்.

கடந்த பல மாதங்களாக, இந்த உயர்ந்த இலக்குகளை அடைய, குறிப்பாக அமெரிக்காவில் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக,  நாம் காட்டிய ஒரு முயற்சி இது,” என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ  இந்தியாவின் மனிதாபிமானத்தை பாராட்டிய அமெரிக்கா :

கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பின் ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அமெரிக்க மண்ணிலிருந்து எந்த ராக்கெட்டையும் அனுப்பவில்லை. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க மண்ணிலிருந்து இரு அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் நாசாவுக்கு முதல் முறையாக ஸ்பேக்எக்ஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

இதற்கு முன் மனிதர்களை விண்ணுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா அரசுகள் மட்டுமே அனுப்பி இருந்தன. முதல் முறையாக தனியார் நிறுவனம் ராக்கெட் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி வரலாறு படைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல் இடையே தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் வெற்றி… 

naveen santhakumar

ஒசாமா பின்லேடனை தியாகி என்ற இம்ரான் கான்… 

naveen santhakumar

சிவகாசியில் பல மொழிகளில் 2020 ஆண்டிற்கான தினசரி காலண்டர் தயாரிப்பு

Admin