உலகம்

கொரோனா நோயாளிகளுக்காக 37 நாட்களில் நாசா உருவாக்கிய கருவி…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தெற்கு கரோலினா:-

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கக்கூடும் என்று அச்சம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு கொரோனா நோயாளிகளிலுக்கு பயன்படும் வகையில் விலை குறைந்த வெண்டிலேட்டர்களை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

தெற்கு கரோலினாவில் உள்ள நாசாவின் ஜெட் புரோபல்ஷன் லேபரட்டரியை (Jet Propulsion Laboratary) சேர்ந்த விஞ்ஞானிகள் 37 நாட்களில் விலை குறைந்த மிகவும் எளிமையான ஹை-பிரஷர் வெண்டிலட்டர்களை தயாரித்துள்ளனர்.

Courtesy.

கரோலினாவின் பசடெனா (Pasadena)வில் உள்ள நாசாவின் ஜெட் புரோபல்ஷன் ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 37 நாட்கள் கடும் முயற்சிக்குப் பிறகு ஹை-பிரஷர் வெண்டிலேட்டர்களை தயாரித்துள்ளனர். இதன் பெயர் VITAL (Ventilator Intervention Technology).

இந்த வென்டிலேட்டர் குறித்து இந்த ஆய்வு இயக்குனர் மைக்கில் வாட்கின்ஸ் (Michael Watkins) கூறுகையில்:-

ALSO READ  அண்டவெளியில் வெப்ப பொருளை உமிழும் கருந்துளையை கண்டறிந்த விஞ்ஞானிகள்...

நாங்கள் விண்கலங்களை வடிவமைப்பாளர்கள் மருத்துவ உபகரணங்களை தயாரிப்பவர்கள் அல்ல. ஆனால் தற்பொழுது நாட்டுக்கான தேவையை கருத்தில் கொண்டு எங்களது திறமையான பொறியாளர்கள் கடும் முயற்சியை மேற்கொண்டு இந்த கருவியை வடிவமைத்துள்ளார்கள். இதன் மூலமாக வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்படுவது தடுக்கப்படும். இந்த நோயின் இரண்டாவது அலை தாக்கினாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் தான் இந்த கருவி வடிவமைத்துள்ளோம். தற்பொழுது பயன்பாட்டில் உள்ள வென்டிலேட்டர்களைவிட இதை கட்டமைப்பதும், பராமரிப்பதும் மிக மிக சுலபம். இதன் விலையும் அதைவிடக் குறைவு என்றார்.

ALSO READ  அலஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கத்தை தொடர்ந்து….. சுனாமி எச்சரிக்கை:

இந்த வென்டிலேட்டர்களை நியூயார்க்கின் மவுண்ட் சினாய் (Mount Sinai)-ல் உள்ள Icahn School Of Medicine-ல் சோதனை செய்துள்ளனர். இங்கு இந்த Icahn School-ன் Human Simulation Lab உருவாக்கிய ஹியூமன் சிமுலேஷன் கொண்டு சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

இதையடுத்து Food And Drug Administration- இன் அனுமதிக்காக காத்துள்ளனர். இந்த வார இறுதிக்குள் இதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல்: ஆறு மாதம் சிறை சிங்கப்பூர் அதிரடி… 

naveen santhakumar

ஜோ பைடன் அரசவையில் திருநங்கை ஒருவருக்கு முக்கிய பதவி :

naveen santhakumar

மியான்மர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகி ராணுவத்தினரால் சிறைபிடிப்பு:

naveen santhakumar