உலகம்

நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தினம்(ஜூன்-12)

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். 

தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடமே இருந்தது. 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது என என அறை கூவி, அறப்போர் வழியில் போராட்டத்தை தொடங்கிய இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லா போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். 

இதனால் 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதான நெல்சன் மண்டேலா மீது தென்னாப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964ஆம் ஆண்டு ஜுன் மாதம் இதே நாளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

ALSO READ  பூங்காவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு….இருவர் படுகாயம்….

மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் தனது 95ஆவது வயதில் காலமானார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இலங்கை பள்ளி மாணவர்களுக்கு சீன அதிபரின் மனைவி எழுதிய பதில் கடிதம்……

naveen santhakumar

கொரோனாவால் பாதித்த நடிகை படப்பிடிப்பிற்கு சென்றதால் அதிர்ச்சி !

Admin

X Æ A-12 என்ற பெயரை உச்சரிப்பது எப்படி என்பதை விளக்கியுள்ளார் எலன் மஸ்க்…

naveen santhakumar