உலகம்

இஸ்ரேல் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


டெல் அவிவ்:-

சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு-வின் (Benjamin Netanyahu) ஆலோசகர் மற்றும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு- க்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.

ALSO READ  இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்; இந்திய பெண்மணி உயிரிழப்பு !

இதேபோல் பிரதமரின் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய ஆலோசகர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்று உறுதியானது.

நெதன்யாகுவின் குடும்பம்.

ஆனாலும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னை சுய தனிமைபடுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து  பிரதமரின் செய்தி தொடர்பாளர் டேவிட் கீஸ் (David Keyes) கூறுகையில்:- 

ALSO READ  இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உடல் நோர்வூட் அரங்கில் தகனம்

இஸ்ரேல் மக்களுக்கு சுய தனிமைப்படுத்துதலின் அவசியம் குறித்து எடுத்துக்காட்டாக இருப்பதற்காக பிரதமர் தன்னைத் தானே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார் என்றார். 

இஸ்ரேல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இதுவரை இஸ்ரேலில் 4,800க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கடித்து குதறிய கரடி…..!!!

Shobika

55 நாட்களில் 6000 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்ட இளைஞர்

Admin

ஆஸ்திரியாவில் துப்பாக்கி சூடு…திடீர் தாக்குதல்…3 பேர் உயிரிழப்பு

naveen santhakumar