உலகம்

பிரிட்டனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கும் விமான போக்குவரத்து தடை : உலக நாடுகள் அறிவிப்பு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின்  வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா  வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். இந்த நிலையில் தான் பிரிட்டனில் தற்போது பரவி வருகிறது புது வகையான கொரோனா  வைரஸ்  


கரோனா தற்போது மரபியல் மாற்றம் அடைந்து வீரியமிக்க கரோனா வைரஸின் புதிய வகை வேகமாக  பிரிட்டன் முழுவதும் பரவி வருகிறது . ஆகையால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறத்து பிரிட்டன் அரசு. உலகையே  தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை விட 70 % வேகமாக பரவுகிறது புதிய வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளில் மீண்டும் கடுமையான  கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாற்றமடைந்த  புதிய வகை வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக பிரிட்டனிலிருந்து பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள்   பிரிட்டனுக்கு விமானம் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது, 

ALSO READ  சசிகலாவுக்கு வரவேற்பு பேரணி நடத்த மனு; அனுமதி மறுத்த காவல்துறை..!

இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கும் பயணத்தடைகளை சர்வதேச நாடுகள் அறிவித்துள்ளன. தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா கிருமிப்பரவல் ஏற்பட்டுள்ளதால் இஸ்ரேல், துருக்கி, ஜெர்மனி, சவூதி அரேபியா, சுவிட்ஸர்லந்து உள்ளிட்ட நாடுகள் தென் ஆப்பிரிக்காவுக்கு  விமானம் போக்குவரத்தை  தடைசெய்துள்ளது. இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் 90 சதவீத ரத்த மாதிரிகளில், புதுவகை கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவுடனான மோதலில் இறந்த சீன வீரர்களின் எண்ணிக்கையை வெளியிட்டால் அரசுக்கு ஆபத்து… 

naveen santhakumar

பிரிட்டனிலிருந்து சிங்கப்பூருக்கு பரவியது புதிய கொரோனா வைரஸ் …!

News Editor

பாதுகாப்பு உடைகள் இல்லை.. குப்பை போடும் பைகளை அணியும் அமெரிக்க, ஐரோப்பிய மருத்துவமனை பணியாளர்கள்…

naveen santhakumar