உலகம்

புதியவகை கொரோனா……லத்தீன், அமெரிக்காக்களில் பரவுகிறது……!!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெனீவா:

கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பின் வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.கொரோனா பாதிப்பு பெரும்பாலான நாடுகளில் குறைய தொடங்கியபோது அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் வெவ்வேறு வகையில் உருமாற்ற கொரோனா வைரஸ் பரவியது தெரிய வந்தது.இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு கிரேக்க எழுத்துக்களான ஆல்பா, பீட்டா, காமா என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பெயரிட்டது.

ALSO READ  காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருக்கு கொரோனா தொற்று !

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா ‘ஆல்பா’ என்றும் இந்தியாவில் உருமாறிய கொரோனா ‘டெல்டா’ என்றும் அழைக்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உருமாற்ற வைரஸ் லத்தீன், அமெரிக்காக்களில் பரவியுள்ளது என்றும், இதற்கு ‘லாம்ப்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு கூறும்போது, ‘லாம்ப்டா’ என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பெரு நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வகையான வைரஸ் 29 லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அர்ஜென்டினா, சிலி போன்ற நாடுகளில் வைரஸ் பரவி இருக்கிறது.

ALSO READ  100% பலனை தரும் கொரோனாவுக்கான மாடர்னா தடுப்பூசி :

இந்த உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரசின் தாக்கம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு புதிய வகை கொரோனா வைரசை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது.

இதற்கிடையே டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.அந்த வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் மாறி வருகிறது என்றும், அதன் பரவும் தன்மை அதிகரித்து வருகிறது என்றும் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Fact Check: இந்தியாவிற்கு எதிராக ஓமன் இளவரசி மோனா பெயரில் போலியான ட்வீட்..!!!

naveen santhakumar

இந்தியாவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் டிக்டாக்-க்கு தடை…. 

naveen santhakumar

ராணுவத்தின் பழைய பிரம்மாண்ட கட்டிடம் இடிப்பு :

Shobika