உலகம்

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவி 7 ஆண்டுகளுக்கு பின் விடுவிப்பு…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அபுஜா:

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீரியாவின் வடக்கு மாகாணம் போர்னோவின் சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து 270 மாணவிகளை கடத்தி சென்றனர்.

7 வருட போராட்டத்திற்கு பின், பயங்கரவாதிகளிடம் இருந்து விடுதலையாகி கணவருடன்  பெற்றோரை சந்தித்த பள்ளி மாணவி.!! - Seithipunal

இந்த கடத்தல் சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவிகளை மீட்க வலியுறுத்தி சமூக வலைதளங்களில் உலக அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.இதனிடையே பயங்கரவாதிகளுடன் நைஜீரிய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு 82 மாணவிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும் பல மாணவிகள் பயங்கரவாதிகளிடம் இருந்து தாமாகவே தப்பி வந்தனர்.

ALSO READ  ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு....4 பேர் பலி ...3 பேர் படுகாயம்....
Nigeria: Chibok schoolgirl free after seven years captivity || நைஜீரியாவில்  பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவி 7 ஆண்டுகளுக்கு பின் விடுவிப்பு

எனினும் 113 மாணவிகள் பயங்கரவாதிகளால் இன்னும் சிறைபிடித்து வைக்கப்பட்டு உள்ளதாக நம்பப்படுகிறது.இந்நிலையில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு சிபோக் நகர பள்ளி மாணவி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக போர்னோ மாகாண கவர்னர் பாபகானா ஜுலம் தெரிவித்துள்ளார்.அந்த பள்ளி மாணவி, பயங்கரவாதிகளின் சிறையில் இருந்தபோது திருமணம் செய்துகொண்ட தனது கணவருடன் இணைந்து அண்மையில் ராணுவத்திடம் சரணடைந்ததாக பாபகானா ஜுலம் தெரிவித்தார்.

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவி 7 ஆண்டுகளுக்கு பின் விடுவிப்பு

அதனை தொடர்ந்து பள்ளி மாணவியின் பெற்றோர் அவரது அடையாளத்தை உறுதி செய்த பின்னர் அவர் தனது குடும்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டதாக கவர்னர் கூறினார்.மேலும், கடத்தப்பட்ட பள்ளி மாணவி 7 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் இணைந்தது, சிறைபிடிக்கப்பட்டிருக்கும் மற்ற மாணவிகளையும் கண்டுபிடிக்கும் நம்பிக்கையை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீடுகளுக்கே சென்று நோபல் பரிசு வழங்கப்பட்டது :

naveen santhakumar

2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மூன்று பொருளாதார நிபுணர்களுக்கு வழங்கப்படுகிறது

News Editor

நாய்க்கு டாக்டர் பட்டம் – அமெரிக்க பல்கலைக்கழகம் அதிரடி.. 

naveen santhakumar