உலகம் வணிகம்

உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி…!!! வரலாறு காணாத சரிவு..!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:-

கொரோனா வைரஸ் உலக நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் தலைகீழாக கவிழ்த்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரமும் ஒட்டுமொத்தமாக சீர்குலைந்துள்ளது. உலக நாடுகளுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தரும் வகையில் கச்சா எண்ணெயின் விலை பூஜியம் டாலர்களுக்கும் கீழே விலை குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி அமெரிக்க கச்சா எண்ணெய் வர்த்தகம் இதுவரை வரலாற்றில் இல்லாத நிகழ்வாக மிகவும் மோசமான சரிவை சந்தித்துள்ளது வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் (WTI Crude Oil) கச்சா எண்ணெயை ஒரு பேரல் (-39.14) டாலர்களுக்கு விற்பனை ஆகியுள்ளது. அதே போல உன் பிரென்ட் (Brend Crude Oil) கச்சா எண்ணெயும் விலையும் சரிந்துள்ளது.

ALSO READ  பரவவும் கொரோனா; முழு ஊரடங்கை அறிவித்த மாநில அரசு !

தற்போது, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்குவதற்கு பதிலாக எண்ணெயை எடுத்து செல்ல வாடிக்கையாளர்களுக்கு பணம் தருகிறார்கள் அமெரிக்காவில் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள்.

எண்ணெயை யாரும் வாங்காததால் அவை சேமித்து வைக்க அடுத்த மாதம் முதல் இடப் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சத்தில் பணத்தையும் கொடுத்து எண்ணெய்யையும் தருகிறது அமெரிக்கா.

உலகம் முழுவதும் கோரோனா பரவல் காரணமாகவும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து விதமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. தவிர தொழிற்சாலைகள் எதுவும் இயங்கவில்லை இதனால் கச்சா எண்ணெயின் தேவை முற்றிலும் இல்லாமல் போய் உள்ளது.

ALSO READ  கொரோனா வைரஸ் கண்டுபிடித்த மருத்துவருக்கு நேர்ந்த சோகம்

ஆனால் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் போட்டி போட்டுக்கொண்டு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னராக அமெரிக்கா இதற்கு தனது கண்டனங்களை தெரிவித்து.

மேலும், இம்மாத தொடக்கத்தில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் (OPEC) உறுப்பு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை 10% அளவுக்கு குறைக்க ஒப்புக்கொண்டன. இதுதான் வரலாற்றிலேயே உற்பத்தியை குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்ட அதிகபட்ச அளவாகும்.

கடந்த 1946 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் காலத்துக்கு பிறகு, அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை தற்போதுதான் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாலியல், மதம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை நீக்க பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் முடிவு

News Editor

கொரானா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டிருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது – பிரிட்டன் அரசு அறிவிப்பு

News Editor

உலக சுகாதார அமைப்பின் விஞானிகள் குழு சீனாவிற்குள் நுழைய தடை..! ஜி ஜின்பிங் அதிரடி 

News Editor