உலகம்

ஒசாமா பின்லேடனை தியாகி என்ற இம்ரான் கான்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இஸ்லாமாபாத்:-

உலகின் மிகவும் ஆபத்தான தீவிரவாதியான அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடனை தியாகி என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  புகழ்ந்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ‘அமெரிக்கப் படைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அபோதாபாத்தில் பதுங்கியிருந்த தியாகி (Shaheed) ஒசாமா பின்லேடனை கொன்றது நமக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது’ என்று கூறினார். இது நாடாளுமன்றத்தில் இருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக தியாக மரணம் (Shaheed kar diya (martyred)) என்று கூறியதை கொல்லப்பட்டார் (Maar diya (killed)) என்று மாற்றி கூறினார்.

ALSO READ  போலி கையில் தடுப்பூசி - வசமாக சிக்கிய சுகாதார ஊழியர்
courtesy.

நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் பேசியது:-

தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கர்களுக்கு நாம் உதவினோம். இந்த உதவிக்கு நமக்கு கைமாறாய் கிடைத்தது மிக மோசமான அவமானம் (Grave Humiliation). என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபடும் ஒரு நாடு தொடர்ந்து அவமானத்தை சந்தித்து வருகிறது. ஆப்கானிஸ்தானத்தில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா தோல்வியுற்றால் அந்த பணியை நம் மீது சுமத்துகிறார்கள். பாகிஸ்தானிற்கு மிக மோசமான அவமானத்தைத் தேடித் தந்த சம்பவம், அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை கொன்றது. இந்த நிகழ்வு மூலமாக மொத்த உலகமும் நம்மீது மொத்த பழியையும் தூக்கி போட்டது. அமெரிக்கா நம்மிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் நம் நாட்டிற்குள் நுழைந்து நம் நாட்டில் இருந்த ஒருவரைக் கொன்றது உலக அரங்கில் நமக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அந்த தியாகங்களுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது என்று கூறினார்.

ALSO READ  "சாணம் முதல் சரக்கு" வரை உலகத் தலைவர்கள் பரிந்துரைக்கும் கொரோனா மருந்துகள்… 

கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அபோதாபாத்தில் ஹேரிசன் நகரில் பதுங்கியிருந்த தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அம்மா சீக்கிரம் வீட்டிற்கு வா-கொரோனா வைரஸால் தனியே தவிக்கும் செவிலியரின் மகள்.

naveen santhakumar

நேபாளத்தில் நிலநடுக்கம்….. ரிக்டர் 6.0 பதிவு:

naveen santhakumar

அசத்தும் தமிழர்கள்..!!!உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் வரிசையில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விஞ்ஞானிகள்…..

naveen santhakumar