உலகம்

‘எனக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள்’ -போப் ஆண்டவர் பிரான்சிஸ் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாடிகன் சிட்டி:

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (84) கடந்த சில நாட்களாக குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார்.எனவே இதற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

போப் ஆண்டவர் மருத்துவமனையில் அனுமதி.. முக்கிய அறுவை சிகிச்சை.. இப்போது  உடல்நிலை எப்படி? | Pope doing well after intestinal surgery, Vatican says -  Tamil Oneindia

போப் பிரான்சிசுக்கு எப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் தெரியவில்லை. எனினும் அறுவை சிகிச்சை முடிந்ததும் அது குறித்த தகவல் வெளியிடப்படும் என வாடிகன் அறிவித்து உள்ளது. நேற்று ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பாக வழக்கமான ஞாயிறு வழிபாட்டில் அவர் பங்கேற்றார். அதில் கலந்துகொண்ட மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அவர் ஆசிகளையும் வழங்கினார். அப்போது இந்த அறுவை சிகிச்சை குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

ALSO READ  பாகிஸ்தான் அரசு அதிரடி- தடுப்பூசி போடாதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிப்பு
உயிருக்கு ஆபத்து இருந்தாலும் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் : போப் ஆண்டவர்  | Virakesari.lk

அதேநேரம் கடந்த வாரம் வழிபாட்டில் பங்கேற்ற மக்களிடம், தனக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த அறுவை சிகிச்சை குறித்தே அவர் இத்தகைய வேண்டுகோள் விடுத்திருந்ததாக கருதப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரேசிலை மிரட்டும் கொரோனா; ஒரே நாளில் 3 ஆயிரத்தை கடந்த உயிர்பலி !

News Editor

பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சீனா முடிவு..

Shanthi

பிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்

Admin