உலகம்

குவாரண்டைன் முறையை அறிமுகப்படுத்தியது யார்..??? எப்போது..??

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகின் பொருளாதார முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. வல்லரசு நாடுகளே இந்த வைரஸை கட்டுப்படுத்த இயலாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். இதனால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கூட ஊரடங்கு உத்தரவு மே ஒன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்து வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளார்கள். 

கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் குவாரண்டைன் (Quarantine) எனப்படும் தனிமைப்படுத்தல் உட்படுத்தப்படுகிறார்கள், சிலர் தாங்களாகவே நோய் தொற்று ஏற்படக் கூடாது என்பதற்காக தங்களைத் தாங்களே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள்.

சரி தற்பொழுது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் இந்த குவாரண்டைன் முறை எப்பொழுது, யார் இதை அறிமுகப்படுத்தினார்.???

குவாரண்டைன் (Quarantine) என்ற சொல் குவாரண்டினா (Quarantena) என்ற வெனிஷிய வார்த்தையிலிருந்து வந்தது.

பொதுவாக காலம்காலமாக மக்கள் இது போன்ற தொற்று நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கும் பரவாமல் தடுப்பதற்கும் பின்பற்றிய முறைதான் தனிமைப்படுத்துதல் அல்லது குவாரண்டைன்.

கிபி பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞரும் மருத்துவருமான இபின் சினா (எ) அபு அலி சினா என்பவர்தான் இந்த குவாரண்டைன் அல்லது தனிமைப்படுத்துதல் என்னும் சொற்றொடரை மருத்துவத்துறையில் அறிமுகப்படுத்தினார் என்று நம்பப்படுகிறது.

நுண்ணுயிர்கள் மூலமாக தொற்று வியாதிகள் பரவுகிறது என்பதை கண்டறிந்த பின் தனிமைப்படுத்துதல் முறை மூலமே ஒருவரை குணப்படுத்த முடியும் என்று கூறினார். குறிப்பாக காசநோய் (Tuberculosis) பாதிப்புக்கு இதை பயன்படுத்தினார். இதற்காக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 40 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

இவர் பின்பற்றிய இந்த முறைக்கு அல்-அர்பேனியா என்று பெயரிட்டார். அல்- அர்பேனியா என்பதன் பொருள் 40. ஆனால் இவர் எதற்காக 40 நாட்களில் தேர்ந்தெடுத்தார் என்பது தெரியவில்லை.

சிலர் இதனை மதரீதியாக இவர் கூறியிருக்கலாம் என்று கூறுகிறார்கள். யூதர்களின் புனித நூலான தோராவில் மோசஸ் 40 நாட்கள்  சினாய் மலையில் (Mt.Sinai) தியானம் செய்ததார் என்று கூறுகிறது. அங்குதான் அவருக்கு இறைவன் பத்து கட்டளைகளை அளித்தார் என்று கூறப்படுகிறது.

ALSO READ  வீடியோ கால் சர்ச்சைகள் - ஒரு ரிவைண்ட் ஸ்டோரி ...!

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் இயேசு கிறிஸ்து பாலைவனத்தில் நாற்பது நாட்கள் தியானம்  இருந்தார் என்று கூறுகிறது. இதேபோல கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலத்தை கடைபிடிக்கிறார்கள்.

இதேபோல இஸ்லாம் மற்றும் இந்து மதங்களில் 40 நாட்கள் விரதம் கடைபிடிக்கும் பழக்கத்தையும் போன்ற காரணங்களை ஒப்பிட்டு இபின் சினா இந்த நாற்பது நாட்களை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள்.

ஆனால் இவர் எதற்காக 40 நாட்கள் என்று வரையறுத்தார் என்று இதுவரை யாருக்கும் சரியாக தெரியவில்லை. பொதுவாக 40 நாட்கள் தனிமையில் இருப்பதன் மூலமாக அந்த நோய் மற்றவர்களுக்கு பரவாது மேலும் நோயாளியை குணப்படுத்த முடியும் என்பது என்பதன் காரணமாக இதன்பின் சீனா கடைபிடித்து இருக்கலாம்.

இபின் சீனாவிற்கு முன்னரே இந்த குவாரண்டின் எனப்படும் தனிமைப்படுத்துதல் முறையை 706 மற்றும் 707 ஆம் ஆண்டுகளில்  ஆறாவது உமாயத் கலிபா அல்-வாலித் (Umayyad Caliphate Al-walit) டமாஸ்கஸ் நகரில் கட்டிய மருத்துவமனையில் செயல்படுத்தினார்.

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிற நோயாளிகளிடமிருந்து தொழு நோயாளிகளை தனிமைப்படுத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்தமுறை 1421 ஆம் ஆண்டுவரை பின்பற்றப்பட்டது ஏனெனில் ஒட்டோமான் பேரரசு 1431 ஆண்டு இடிர்ன் (Edirne)நகரில் தோல் நோய்க்கான சிறப்பு மருத்துவமனை ஒன்றை கட்டியது.

இதனை இபின் சினா மருத்துவத்துறையில் அறிமுகப்படுத்தியது கூறப்பட்டாலும் இதனை இவர் யூதர்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்டிருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது ஏனெனில் யூதர்களின் புனித நூலான தோராவில் குவாரண்டின் எனப்படும் தனிமைப்படுத்துதல் முறை தெளிவாக கூறப்பட்டுள்ளது.

தோராவில் உள்ள லேவிடிகஸ் (Leviticus) நூலில் இதுகுறித்த தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

லேவிடிகஸ் நூலில் ஒருவருடைய தோளில் வெள்ளை ஏற்பட்டாலோ அல்லது அவரது முடியின் நிறம் மாறினாலோ அவர்களை ஏழுநாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும். பின்னர் மருத்துவர் அவரை சோதிக்க வேண்டும் ஏழு நாட்களுக்குப் பிறகும் பாதிக்கப்பட்டவரின் தோல் மாறவில்லை என்றால் அவரை மீண்டும் ஏழுநாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும். இந்தப் பதினான்கு நாட்கள் முடிவிலும் அவருக்கு தோலில் மாற்றம் ஏற்படவில்லை என்றார் அவருக்கு தொழுநோய் ஏற்பட்டதாக கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ  தொடரும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் உலக நாடுகள்..!

மருத்துவ வளர்ச்சி பெறாத அந்த காலகட்டத்தில் தொழுநோய் ஒரு தொற்று நோயாக இருந்தது எனவே தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இருந்து முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டு ஊரைவிட்டு வெளியே அனுப்பப்பட்டார்கள். அவர்களுக்குள் வரவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர்களைச் சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் தொழு நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அந்த நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  அதன்பிறகு தொழுநோய் பின்பற்றி வந்த தனிமைப்படுத்தல் முறையும் கைவிடப்பட்டது.

முன்னரே குவாரண்டின் முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் 14ம் நூற்றாண்டில் தான் இந்த தனிமைப்படுத்துதல் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.13ம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய நாடுகளில் உருவான பிளேக் நோய் இதுவரை ஏற்பட்ட தொற்று நோய்களில் அதிக உயிர் பலி வாங்கியுள்ளது கிட்டத்தட்ட ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நோயினால் உயிரிழந்தனர்.

இதனால் பிளேக் நோய் கருப்பு மரணம் என்று அழைக்கப்பட்டது. இதனால் மக்கள் தினம் தினம் கொத்துக்கொத்தாக உயிரிழந்ததை அடுத்து நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்துதல் உட்படுத்தப்பட்டார்கள்.

1348 முதல் 1359 வரை காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஐரோப்பாவின் மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் இந்த நோயினால் மரணமடைந்தார்கள். ஆரம்பத்தில் இந்த முறை ட்ரென்டைன் (Trentine) அதாவது 30 நாட்களுக்கு தனிமைப்படுத்த பட்டார்கள் 1377 ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு குறிப்பின்படி குரேஷியா நாட்டிலுள்ள டல்மாட்டியா (Dalmatia) அருகே ரகுசா (Ragusa) நகருக்கு வருபவர்கள் 30 நாட்களுக்கு தனியே ஒரு தீவில் தனிமைப் படுத்தப் பட்டார்கள்.

பின்னர் வெனிசியன் செனட் சபை (Venetian Senate) இந்த முறையை 40 நாட்களுக்கு அதிகப்படுத்தியது இதன் மூலம்  குவாரண்டின் முறை பிறந்தது. 

மொத்தத்தில் குவாரண்டின் என்றால் 40 என்று பொருள்படும். ஆனால் தற்போது பின்பற்றப்படும் இந்த நடைமுறை 40 நாட்களுக்கு பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களுக்கு பின்பற்றப்படுகிறது. 

இந்தியாவில் 14 நாட்கள் அடுத்த 14 நாட்கள் என மொத்தம் 28 நாட்களுக்கு இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. அதனால்தான் முதலில் மூன்று வாரங்களுக்கு அதாவது 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நேபாளத்தில் நிலநடுக்கம்….. ரிக்டர் 6.0 பதிவு:

naveen santhakumar

சூரியனின் மேற்பரப்பு இப்படித்தான் இருக்கும்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்

Admin

2 புதிய இந்திய தூதர்கள் நியமனம்:

naveen santhakumar