உலகம்

காற்று மாசு அதிகரிப்பதால் இதய நோய் ஏற்பட வாய்ப்பு – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காற்று மாசுபாடு எதிர்பார்த்ததை விட மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

காற்று மாசுபாடு தொடர்புடைய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 70 லட்சம் பேர் தங்கள் வாழ வேண்டிய காலத்துக்கு முன்பே இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Is air pollution making the coronavirus pandemic even more deadly? |  Coronavirus | The Guardian

தெற்காசியா பகுதிகளில் குறிப்பாக இந்தியா உலகின் மாசுபட்ட பகுதிகளில் முதன்மையாக தொடர்ந்து இருந்து வருவது கவலைக்குரியது. மாசுபடுத்தும் அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Air pollution may affect the lethality of COVID-19

புது டெல்லியில் க்ரீன்பீஸ் நிறுவனத்தின் ஆய்வின்படி 2020 ஆம் ஆண்டு பி எம் 2.5 இன் சராசரி செறிவு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட 17 மடங்கு அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. மும்பையில், மாசு அளவு எட்டு மடங்கு அதிகமாகவும், கொல்கத்தாவில் ஒன்பது மடங்கு அதிகமாகவும் சென்னையில் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

புதிய காற்றின் தர வழிகாட்டுதல்கள் ஆண்டின் முழு இந்தியாவும் மாசுபட்ட மண்டலமாக கருதப்படும். உலக சுகாதார அமைப்பின் தகவல் படி உலக மக்கள்தொகையில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் 2005 ஆம் ஆண்டில் மாசுபாட்டை பூர்த்தி செய்யாத பகுதிகளில் வாழ்ந்தனர். இப்போது விதிமுறைகள் இன்னும் கடுமையானதாக இருப்பதால், இந்த விகிதம் மேலும் உயரும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

ALSO READ  சீனாவின் கொரோனா வைரஸால் மற்ற நாட்டு மக்களும் அவதி
Air Pollution Facts, Causes and the Effects of Pollutants in the Air | NRDC

மேலும் உலக சுகாதார அமைப்பு பின்கண்ட தகவல்களையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

காற்று மாசுபாட்டுக்கும் இதய நோய் மற்றும் மாரடைப்புக்கும் தொடர்புள்ளது. குழந்தைகள் மத்தியில் காற்று மாசுபாடு நுரையீரலின் வளர்ச்சியைக் குறைத்து, ஆஸ்துமாவை அதிகப்படுத்தும்.

காற்றின் தரத்தை உயர்த்துவது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும். நச்சுக் காற்று உமிழ்வைக் குறைப்பது காற்றின் தரத்தை உயர்த்தும்.

ALSO READ  வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து - மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

காற்று மாசுபாடு தொடர்புடைய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 70 லட்சம் பேர் தங்கள் வாழ வேண்டிய காலத்துக்கு முன்பே இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் பலியான தாயின் இறுதிசடங்கில் மகள் பலி…

naveen santhakumar

அமெரிக்காவில் கடும் பனியால் கார்கள் மோதி விபத்து

Admin

சீனா விண்வெளி வீராங்கனை வங் யாப்பிங் விண்வெளியில் 6 மணி நேரம் நடந்து சாதனை

News Editor