உலகம்

8000 கிலோ மீட்டருக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு பகிர்வு திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

8000 கிலோ மீட்டருக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு பகிர்வு திட்டம் தொடக்கம்

ரஷ்யா மற்றும் சீனா இடையே சுமார் 8000 கிலோ மீட்டருக்கு நீளமான குழாயில் இயற்கை எரிவாயு பகிரும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

உலகிலேயே அதிக அளவு எரிபொருளை பயன்படுத்தும் நாடாக சீனா திகழ்கிறது. இதனால் அந்நாட்டின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் “செர்பியாவின் சக்தி” என்ற பெயரில்ரஷ்யாவில் இருந்து 3000 கி.மீ. தொலைவுக்கும், சீனாவில் இருந்து 5,111 கி.மீ. தொலைவுக்கு இயற்கை எரிவாயு பகிர குழாய் அமைக்கப்பட்டுள்ளது என சீனா அறிவித்துள்ளது.

ALSO READ  அதிர்ச்சி….. 300க்கும் மேற்பட்ட யானைகள் பலி……. நச்சு நீர்…...

இந்த இயற்கை எரிவாயு பகிர்வு திட்டம் மூலம் ரஷ்யாவுக்கு ஆசியாவில் புதிய சந்தை அமைய வாய்ப்புள்ளது. இதன்மூலம் பல பில்லியன் டாலர் வருவாயை அந்நாடு ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எரிவாயு பகிர்வு நிகழ்ச்சியை சீனா அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்துள்ளனர். மேலும் 2020ஆம் ஆண்டுக்குள் இயற்கை எரிவாயு விநியோகம் கிட்டத்தட்ட 5 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2024ஆம் ஆண்டிற்குள் 38 பில்லியன் கன மீட்டராகவும், அடுத்த 30 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்க 2014ஆம் ஆண்டே இரு நாடுகளிடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ZOOM App இல் உள்ள ஆபத்துக்கள் என்ன? விரிவாக விளக்கும் நிபுணர்கள்..

naveen santhakumar

டோக்கியோ ஒலிம்பிக் 2020 நிறைவடைந்தது – பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது – இந்தியாவுக்கு 33 வது இடம்

News Editor

தொலைபேசியை விழுங்கிய நபர்… ‘ஸ்கேன்’ ரிப்போர்ட் பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்…!

News Editor