உலகம்

கொரோனா பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து கிராமத்தை சுற்றி அகழி வெட்டி தனிமைப்படுத்திய அதிகாரிகள்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சைபீரியா:-

ரஷ்யாவில் தொலைதூர கிராமம் ஒன்றில் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அக்கிராமத்தை சுற்றி அகழி வெட்டி அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர்.

ரஷ்யாவில் சைபீரியாவின் பரியேடியா (Buryatia) பகுதியில் பைக்கால் ஏரிக்கு (Baikal Lake) தென்கிழக்கில் அமைந்துள்ள ஷுலுட்டா (Shuluta) கிராமத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தப் பகுதியில் மொத்தம் 390 பேர் வசித்து வருகின்றனர். அதில் சுமார் 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கிராமத்தை முழுவதுமாக தனிமைப்படுத்த முடிவெடுத்த அதிகாரிகள் கிராமத்தை சுற்றி அகழி போல் பள்ளம் தோண்டியுள்ளனர். 

ALSO READ  ஒசாமா பின்லேடனை தியாகி என்ற இம்ரான் கான்... 

இந்தக் கிராமத்தின் அருகில் துங்கா தேசிய பூங்கா (Tunka National Park) இருப்பதால் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கிராமத்திற்குள் மற்றவர்கள் வராமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்த அகழிகள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 10ஆம் தேதி இந்த கிராமத்தில் ஷாமன் (Shaman) எனப்படும் பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சடங்கு நிகழ்ச்சியை நடத்திய பெண்மணிக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற மற்றவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

ALSO READ  சிரிச்சா அலுவலகத்துக்குள் செல்ல முடியம்

இந்த கிராம மகளிர் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது இதையடுத்து கிராமத்தில் இருக்கும் தன்னார்வலர்கள் பலர் உணவுகளை வழங்கி வருகிறார்கள். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரு பாட்டில் காற்று ருபாய் 2500 ருபாய் : பிரிட்டன் நிறுவனம் அதிரடி 

News Editor

உலகிலேயே மிக இளம் வயது பிரதமர் இவர் தான் – சாதனைப் படைந்த பின்லாந்து பெண்

Admin

கொரோனா தடுப்பு மருந்தான பைசரின் முதல் டோஸ் ஜோ பிடனுக்கு செலுத்தப்பட்டது:

naveen santhakumar