உலகம்

ஹிஸ்புல்லாகளை பயங்கரவாதிகள் என்று அறிவித்துள்ள செர்பியாவின் முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெல்கிரேட்:-

செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக் (Aleksandar Vucic) கடந்த வாரம் அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கொசாவா பிரதமர் அவ்துல்லா ஹோதி (Avdullah Hoti) ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பயணத்தின்போது ஹிஸ்புல்லா அமைப்பினரை பயங்கரவாதிகள் என்று அறிவிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதில் மூலமாக ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் பயங்கரவாதிகள் என்று செர்பியா அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயங்கரவாதிகள் என்று அறிவித்துள்ள செர்பியாவில் முடிவிற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசின் செயலாளர் மைக் பாம்பியோ கூறுகையில்:-

ALSO READ  கொரோனோ வைரஸ் பாதிப்பு... தனி விமானம் அனுப்பும் அமெரிக்கா

செர்பிய அரசின் கொள்கை முடிவு அமைப்பினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். மேலும், ஐரோப்பிய நாடுகளில் அவர்களது நடவடிக்கைகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் தடைக்கல்லாக அமையும் என்று கூறியுள்ளார். 

இதற்கு முன்னர் கொசாவோ ஹிஸ்புல்லா இயக்கத்தினரை பயங்கரவாதிகள் என்று அறிவித்தது. கடந்த ஆண்டு ஹிஸ்புல்லா இயக்கத்தின் ராணுவ பிரிவை தடைசெய்த கொசாவோ இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் அரசியல் பிரிவையும் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  காந்தி சிலை சேதம்; மத்திய அரசு கண்டனம் !

1980களில் லெபனான் நாட்டில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களால் ஹிஸ்புல்லா அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.  இந்த அமைப்பு ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கான துணை ராணுவம்  மற்றும் அரசியல் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

முன்னர் லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்வதைத் தடுப்பதில் கவனம் செலுத்தியது. தற்பொழுது இந்த அமைப்பு சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக உள்நாட்டுப் போரில் பங்கேற்று உள்ளது. மேலும் இந்த அமைப்பினருக்கு ஈரான்  ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போராட்டம் நடத்தியவர்கள் மீது பாய்ந்த கார்….6 பேர் படுகாயம்….

naveen santhakumar

ஜெர்மனியில் கத்திக்குத்து-3 பேர் பலி

Shobika

கொரோனாவால் 27 வயது மருத்துவரின் நிலைமை என்னாச்சு தெரியுமா?

Admin