உலகம்

இலங்கையின் சுகாதாரத்துறை மந்திரி பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொழும்பு:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இலங்கையையும் விட்டுவைக்கவில்லை.இலங்கையில் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அங்கு 56 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்றால் 278 பேர் மரணமடைந்துள்ளனர்,தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இலங்கை நாட்டின் சுகாதாரத் துறை மந்திரியாக உள்ள பவித்ரா வன்னியராச்சிக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இலங்கை சுகாதார மந்திரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மந்திரி பவித்ரா வன்னியராச்சி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 2-வது மந்திரியும், 5-வது MP-யுமாவார்.


Share
ALSO READ  இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் பெற்று சாதனை

News Editor

இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க விரும்புகிறோம்- தாலிபான் அறிவிப்பு…

naveen santhakumar

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்; இந்திய பெண்மணி உயிரிழப்பு !

News Editor