உலகம்

கொரோனா நோயாளிகளுக்கென பிரத்யேக மெத்தையை வடிவமைத்த இலங்கை மாணவி……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொழும்பு:-

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கென பிரத்யேக மெத்தை ஒன்றை இலங்கையைச் சேர்ந்த மாணவி ஒருவர் வடிவமைத்துள்ளார்.

இலங்கையின் களுத்துறை-நகோடா தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பயின்று வரும் சந்தலி நிப்மா என்ற மாணவி இந்த மெத்தையை வடிவமைத்துள்ளார்.

இலங்கையிலும் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது  இதனால் பயன்படுத்தப்பட்ட மெத்தைகளை அதன் அடுத்த பக்கம் திருப்ப வேண்டும். இவ்வாறு செய்வது மூலம் கொரோனா தொற்று மற்றவருக்கும் ஏற்படும் அபாயம் உள்ளதால் தொலைவிலிருந்து ரிமோட் மூலமாக கையாளும் வகையில் மெத்தை ஒன்றை வடிவமைத்துள்ளார்.

அதேபோல் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி கைகளை கழுவ வேண்டி உள்ளது. எனவே ரிமோட் மூலமாக பாதுகாப்பான நீர் வழங்கும் வசதியும் இதில் உள்ளது.

ALSO READ  அமெரிக்க அதிபரின் கொரோனா தொற்று குறித்து மோடி டுவீட்:

இந்த மெத்தையை தனது தந்தை கீதா நந்த உதயசிறி மற்றும் சித்தப்பாவின் உதவியுடன் தயாரித்துள்ளார் இந்த மாணவி.

 இதுகுறித்து கூறிய இந்த மாணவி:-

தொலைவிலிருந்து ரிமோட் மூலம் கையாளும் மெத்தையும் ஒன்று இதுவரை தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை, அரசு முறையான உதவிகளை வழங்கினால் சர்வதேச அளவில் இதுபோன்ற மெத்தைகளை தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

ALSO READ  பாகிஸ்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்ட முதல் ஹிந்து இளைஞர்....


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெட்ரோல் டேங்கர் தீப்பற்றி வெடித்து சிதறல் :

Shobika

டவுட்டுக்கே இப்படியா…கொரோனாவால் ஒருவர் சுட்டுக்கொலை

Admin

நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் முதல்வர்!

Shanthi