உலகம் சாதனையாளர்கள்

சுந்தர் பிச்சையின் வருமானம் ரூ.2788 கோடியாக உயர வாய்ப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு அடுத்த ஆண்டு சம்பளமாக இந்திய மதிப்பில் ரூ.2788 கோடி ரூபாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜன., 1ம் தேதி முதல் சுந்தர் பிச்சை 2 மில்லியன் டாலர் சம்பளத்தை பெறுவார் என ஆல்பபெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர, கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் பங்கு உள்ளிட்டவற்றில் சுந்தர் பிச்சையின் பங்காக ரூ.1700 கோடி வழங்கப்பட உள்ளது. 2022 ம் ஆண்டு வரையிலான பங்காக 90 மில்லியன் டாலர்கள் சுந்தர் பிச்சைக்கு டிச.,19 அன்று வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ  பரவவும் கொரோனா; முழு ஊரடங்கை அறிவித்த மாநில அரசு !

2004 ம் ஆண்டு கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை, கூகுளின் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வசித்தார். இதுவே உலக அளவில் கூகுள் மிகவும் புகழ்பெற்ற இன்டர்நெட் பிரவுசராக மாற காரணமாக அமைந்தது. கூகுளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வசித்ததற்காக 2015 ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ.,வாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் பிச்சையின் செயல்பாடுகளுக்காக 120 மில்லியன் டாலர்களும், அவர் தனது பணியை தொடர்வதற்காக 30 மில்லியன் டாலர்களும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன் ஆல்பபெட் நிறுவன சிஇஓ.,வாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குற்றம் நிரூபிக்ப்பட்டால் ஆங் சான் சூகிக்கு 60 ஆண்டுகள் வரை சிறை..!

Admin

கொரோனா பரவல்: உலகின் பாதுகாப்பான நாடு எது..??

naveen santhakumar

பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழப்பு…

Shobika