உலகம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவுடன் இன்று பாகிஸ்தான் மோதுகிறது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

துபாய்

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்-1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ALSO READ  தொடர்ந்து இந்திய பிரபலங்களை குறிவைக்கும் Man vs Wild நிகழ்ச்சி

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

ICC T20 World Cup 2021: India-Pakistan match should go on, says Prakash  Padukone - Sports News

இந்த நிலையில் சூப்பர்-12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார் விஜயகாந்த் - வைரலாகும் விமான நிலைய காட்சிகள்!

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா ஊரடங்கு உத்தரவு நேரத்தில் புதிதாக உருவாகியிருக்கும் பில்லோ சேலஞ்ச்….

naveen santhakumar

13 வயது சிறுவனிடம் ஆசிரியை இப்படி பண்ணலாமா.. !

Admin

கொரோனா காலத்தில் தன் சொத்து மதிப்பை உயர்த்திய : எலான் மஸ்க்

News Editor