உலகம்

விரைவில் விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா – எங்கு தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து நாட்டில் விரைவில் கஞ்சா பீட்சா விற்பனைக்கு வர உள்ளது.

Crazy Happy Pizza': Thai chain's viral pizza with cannabis is trendy but  won't get you high; here's why

உலகம் முழுவதும் பிரபலமான போதை பொருள் கஞ்சா. இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. சில நாடுகளில் இதை பயன்படுத்த கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் தாய்லாந்தில் ஒரு நிறுவனம் கஞ்சா பீட்சாவை தயாரித்துள்ளது.

This trendy pizza comes with a cannabis leaf topping, but won't get you  high - The Economic Times

தாய்லாந்து, நாட்டில் பலராலும் விரும்பப்படும் உணவகம் தி பீட்சா கம்பெனி. ஆனால் சமீபகாலமாக இந்த நிறுவனத்தில் பீட்சாவின் விற்பனை மந்தமான நிலையிலேயே காணப்பட்டது.

இந்த மந்த நிலையை போக்க எண்ணிய உணவகம், புதிய யுக்தியை கையாளும் வகையில் புதிய பீட்சாவை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதாவது இந் நிறுவனம் சமீபத்தில் தங்கள் மெனுவில் “கிரேஸி ஹேப்பி பீட்சா” Crazy Happy Pizza என்ற புதிய வகை பீட்சாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பீட்சாவின் புதுமை என்ன வென்றால் இந்த பீட்சாவில் டாப்பிங்ஸாக கஞ்சா இலை வைக்கப்பட்டிருக்கும்.

ALSO READ  தடுப்பூசி போடுங்கள்… 20 இலவச அரிசி பெருங்கள்- அதிரடி அறிவிப்பு..!

உண்மையான கஞ்சா இலை தான் வைக்கப்படும் என்றாலும் இந்த கஞ்சா இலை பிரஷ் இலை என்பதால் இது போதை தராது. பொதுவாக கஞ்சா இலை காய்ந்த இலை தான் போதை பொருளாக மாறும். இது பிரஷ் இலை என்பதால் எந்த விதமான போதையும் தராது.

அதே நேரத்தில் இந்த பீட்சாவை ஒரு மார்கெட்டிங் யுக்திக்காக தயார் செய்து விற்பனை செய்கின்றனர். மேலும், இதற்கு முறையான அனுமதியையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ  ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்...கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை…!

இந்த பீட்சா 499 பாத் அதாவது இந்திய மதிப்பில் ரூ1100 என்ற விலையில் விற்பனையாகிறது. கூடுதலாக இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு ரூ. 225 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

cannabis pizza thailand: Crazy Happy Pizza : தாய்லாந்தில் தயாராகும் "கஞ்சா  பீட்சா" விலை எவ்வளவு தெரியுமா? - thailand fast food chain restaurant  selling 'crazy happy pizza' which is made with cannabis ...

தாய்லாந்தை பொறுத்தவரை கஞ்சா தடை செய்யப்பட்ட ஒரு பொருள் என்றாலும் கடந்த பிப் மாதம் கஞ்சாவை உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பில் குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தலாம் என அந்நாட்டு அரசு சட்டம் கொண்டு வந்துவிட்டது.

மேலும், உணவின் ஒட்டு மொத்த எடையில் 0.2 சதவீதத்திற்கு மிகாமல் கலவை செய்யலாம் யுன சட்டம் சொல்கிறது. மேலும் இப்படி தயார் செய்யப்படும் உணவுகளை விளம்பரபடுத்தவோ 12 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு வழங்கவோகூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவின் தாக்குதலை எதிர்கொள்ள முப்படைகளையும் தயார் செய்யும் தைவான்…

naveen santhakumar

கொரோனா நோயாளிகளுக்கென பிரத்யேக மெத்தையை வடிவமைத்த இலங்கை மாணவி……

naveen santhakumar

தொழிலாளர்கள் நலனுக்காக….. இந்தியாவிற்கு அமெரிக்கா 15 கோடி நிதியுதவி:

naveen santhakumar