உலகம்

கொரானா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டிருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது – பிரிட்டன் அரசு அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன் :

இந்தியாவில் இருந்து வரும் பிரிட்டன் வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

Prime Minister's statement on coronavirus (COVID-19): 31 July 2020 - GOV.UK

பிரிட்டன் வரும் இந்திய பயணிகள் கொரானா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்ற பிரிட்டன் அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் அரசு கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் இருந்து வரும் பிரிட்டன் வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது.

U.K. Imposes Harsher Lockdown on London, Citing New Version of Virus - The  New York Times

இதன்படி 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் உட்பட அனைவருக்கும் மீண்டும் 3 கட்ட கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ALSO READ  வெளியாகிறது திமுகவின் வேட்பாளர் பட்டியல்; கவலையில் தொண்டர்கள் !

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்வதற்கு 3 நாட்களுக்கு முன்பாக முதல் கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் பிரிட்டனுக்கு நுழைந்ததும் இந்திய பயணிகள் மேலும் 2 சோதனைகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 10 நாட்கள் கட்டாயமாக தனிமைப் படுத்தபடுவார்கள் என்று பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

ALSO READ  நிர்மலா சீதாராமன் இன்றைய அறிவிப்புகள்- மின்துறை முதல் விண்வெளி வரை அனைத்திலும் தனியாருக்கு அனுமதி. 

வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதிமுதல் புதிய கட்டுப்பாடுகள் பிரிட்டனில் அமல்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் அரசின் இந்த திடீர் கட்டுப்பாட்டு விதிகளால் பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர காத்திருக்கும் இந்திய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையராக வோல்கர் டர்க் நியமனம்!

Shanthi

நைஜீரியாவில் பயங்கரவாதம்……பள்ளிகள் மூடும் நிலை…….

Shobika

உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு..

Shanthi