உலகம்

11,500 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழக்கூடிய அரிய நிகழ்வு.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கலிபோர்னியா:-

11,600 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் நிகழக்கூடிய அரிய நிகழ்வான பச்சை வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் கண்டு களிக்கலாம் என்று என்று நாசா அறிவித்துள்ளது.

ஸ்வான் என்று அழைக்கப்படும் இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் தற்போது பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது. இதன் வால் மட்டும் ஒரு கோடியே 77 லட்சம் கி.மீ., நீளம் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த வால் நட்சத்திரத்தை C/2020 F8  என்று வகைப்படுத்தியுள்ளனர்.

ALSO READ  ராக்கெட்டில் பயணிக்கும் வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்கும் ஸ்பேஸ் எக்ஸ் சோதனை வெற்றி

பனி மற்றும் தூசுக்களால் ஆன வால் நட்சத்திரம் தெற்கிலிருந்து வடக்காகச் செல்வதாகவும், தற்போது பூமியிலிருந்து 5.3 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் இந்த நட்சத்திரம் மே மாத இறுதி வாரத்தில் மே 27 முதல் ஜூன் 2 தேதிகளில் கண்களுக்கு தெரியும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சூரியனை நோக்கிய வழியில் செல்லும் போது வெப்பமடைந்து அது சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது என்று கூறும் ஆய்வாளர்கள் இதை 5 முதல் 6 நாட்கள் வரை வெறும் கண்களாலேயே கணடு மகிழலாம் என்று தெரிவித்துள்ளனர்.

ALSO READ  NASA-வின் அதிர்ச்சி அறிக்கை.....இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்.....

இந்த வால் நட்சத்திரத்தை ஆஸ்திரேலிய வானவியலாளர் ஆன மைக்கேல் மேட்டியஸோ (Michael Mattiazzo) என்பவர் கண்டறிந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்:-

இந்த வால்நட்சத்திரம் ஏற்கனவே பூமியை கடந்து விட்டது இது சூரியனுக்கு அருகில் செல்கையில் நமது கண்களுக்கு இது பிரகாசமாக தெரியும் என்று கூறியுள்ளார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வேதியியல் துறைக்கான 2021 ஆண்டுக்குரிய நோபல் பரிசு அறிவிப்பு

News Editor

அமெரிக்காவில் கருப்பினத்தவர் நடுரோட்டில் கழுத்தில் காலை வைத்து தாக்கி கொன்ற போலீசார்- கலவர பூமியான அமெரிக்கா… 

naveen santhakumar

மூட்டைப் பூச்சித் தொல்லை அவசர ஹாட்லைன் அறிமுகப்படுத்திய நாடு….

naveen santhakumar