உலகம்

விமானத்தில் செல்வதுபோல் விண்வெளி செல்வதற்கும் வாகனம் தயார் செய்யப்படும் – மயில்சாமி அண்ணாதுரை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை

விமானத்தில் செல்வதுபோல் விண்வெளி செல்வதற்கும் வாகனம் இனி வரும் காலத்தில் தயார் செய்யப்படும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

Comparison of Asian national space programs - Wikipedia

செயற்கைகோள் தயாரிப்பு பணி என்பது ஏராளமான விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியாகும். கொரானா தொற்று காலத்தில் ஏற்பட்ட ஊரடங்கால் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயற்கைகோள் தயாரிப்பு பணிகள் முழுமையாக நடக்கவில்லை.

சந்திராயன் 1 விண்கலத்தின் ஆயுள்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது . எனவே அதற்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

நாம் தற்போது விமானத்தில் பயணிப்பதை போல விண்வெளி செல்வதற்கும் வாகனம் இனி வரும் காலத்தில் தயாராகும். விண்வெளி செல்வதற்கான வாகனத்தை நாம் சுற்றுலாவுக்கான ஆராய்ச்சிக்காக பயன்படுத்தி கொள்ள இயலும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

ALSO READ  தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தேர்வு ?
Mylswamy Annadurai - Wikipedia

எனவே நாம் எல்லோரும் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்ய உள்ள வாய்ப்புள்ளது குறித்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

ஏற்கனவே தண்ணீர் இருப்பதால் அங்கிருந்து கார்பன் டை ஆக்சைடை பிரித்து அங்குள்ள மண்ணுக்கு ஏற்ற தாவரங்களை உருவாக்க முடியுமா என்பதை ஆராய்ந்து வருகிறோம். பூமியில் இருந்து செவ்வாய் கிரகம் செல்ல 9 மாதங்களாகிறது. அந்த பயண நாட்களில் தாவர உற்பத்தி செய்து சமைக்க முடிவதற்கான சாத்திய கூறுகளும் உள்ளன எனறும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆங் சான் சூகியை விடுதலை செய்யக்கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல் :

naveen santhakumar

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 303 பேர் கொல்லப்பட்டனர் :

Shobika

‘ஓமிக்ரான்’ – உலகை அச்சுறுத்தும் அடுத்த கொரோனா திரிபு – உலக சுகாதார நிறுவனம்

naveen santhakumar