உலகம்

உலகின் முதல் மின்சார தானியங்கி கப்பல் : நார்வே நாட்டில் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நார்வேயின் யாரா இன்டர்நேஷனல் நிறுவனம் உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை அறிமுகம் செய்துள்ளது.

First electric autonomous cargo ship launched in Norway - Asia Newsday

80 மீட்டர் நீளமுள்ள இந்த எலெக்ட்ரிக் தானியங்கி சரக்கு கப்பலுக்கு யாரா பிர்க்லேண்ட் என பெயரிடப்பட்டுள்ளது, இந்த எலெக்ட்ரிக் தானியங்கி சரக்கு கப்பல் தெற்கு நார்வேயின் போர்ஸ்கிரன்னில் உள்ள உற்பத்தி ஆலையிலிருந்து 14 கிமீ தொலைவில் பிரெவிக்கில் உள்ள ஏற்றுமதி துறைமுகத்திற்கு சரக்கு போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.

முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கப்பல் இயக்குவதால் ஆண்டுக்கு 1000 டன் கார்பன் வெளியேற்றம் குறையும். இதனால் நாட்டின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறையும்

ALSO READ  அசத்தல் அறிவிப்பு.....தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு :
World's First Electric Autonomous Cargo Ship Launched In Norway

மின்சார மற்றும் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் இயங்கும் கப்பலை உலகிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்வதன்மூலம் மிகப்பெரிய மாற்றத்தின் முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம்.

இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல நீர்வழித்தடங்களில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என யாரா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வெய்ன் தோர் ஹோல்ஸ்தர் தெரிவித்துள்ளார்.

ALSO READ  இலக்கியத்திற்கான நோபல் பரிசு : எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு வழங்கப்படுகிறது
Yara debuts world's first fully electric and self-steering container ship

இந்த மின்சார தானியங்கி கப்பல் அதிகபட்சமாக மணிக்கு 27. கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட சிலுவை… 

naveen santhakumar

அதிகாலையில் அமெரிக்க தூதரகத்தின் மீது ராக்கெட் தாக்குதல்…!

naveen santhakumar

மதத்தை தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் கருத்து- பேராசிரியருக்கு தூக்குதண்டனை

Admin