உலகம்

அமெரிக்காவில் புலிக்கும் கொரோனா வைரஸ்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:-

மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், முதலில் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது என்று கூறப்பட்டது  பின்னர் மனிதர்களிடமிருந்து விலங்குகளைப் பரவாது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன. 

ஆனால், இந்தக்கூற்றைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் அமைந்துள்ள புரான்ஸ் உயிரியல் பூங்காவில் (Bronx Zoo)

பரமாரிக்கப்பட்டு வரும் நாடியா என்ற 4வயது மலையன் பெண் புலி (Malayan Tiger) ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என விலங்கியல் மருத்துவர் பவுல் கேல் (Paul Calle)  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய டாக்டர் பவுல் கேல் :-

ALSO READ  சீனாவில் 24 மணி நேரமும் இயங்கும் சுடுகாடுகள்...

உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே, அந்த நபர் மூலமாக புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும், இதன் சகோதரி புலி அஸுல் (Azul) மற்றும் வேறு ஐந்து புலிகள் மற்றும் சில சிங்கங்களுக்கு வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. 

ALSO READ  "உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்" - இங்கிலாந்து பிரதமர் வாக்குறுதி!

புலிகள் மற்றும் சிங்கங்களிடம் வைரஸ் எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. எனினும், பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

இதன் மூலம் உலகிலேயே முதன் முறையாக காட்டு விலங்கு ஒன்றிற்கு மனிதர்கள் மூலம் வைரஸ் தொற்று பரவி உள்ளது இதற்கு முன்னர் ஹாங்காங்கில் உரிமையாளர்கள் மூலம் இரண்டு நாய்கள் மற்றுமொரு பூனைக்கும் பெல்ஜியத்தில் ஒரு பூனைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டும் டிரம்ப்…..

naveen santhakumar

கொரோனாவிற்கான பைசர் தடுப்பூசி போடப்பட்ட 2 பேருக்கு ஒவ்வாமை :

naveen santhakumar

இரு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட கொரோனா தொற்றை பரப்பலாம்

News Editor