உலகம்

32வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள்; டோக்கியோவில் கோலாகல தொடக்கம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:-

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 32வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

Tokyo Olympics Opening Ceremony – India at Tokyo Olympics

டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

கொரோனா பரவலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது. இன்று தொடங்கும் ஒலிம்பிக்ஸ் போட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியை ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ தொடங்கிவைக்கிறார். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்க டோக்கியோ சென்றுள்ளனர். இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11,683 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

ALSO READ  அமெரிக்காவில் கடும் பனியால் கார்கள் மோதி விபத்து
Tokyo 2020 opening ceremony: Where to watch, timings, cost, significance -  All you need to know

குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத்சிங் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர். ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் இந்தியா சார்பில் 20 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

ALSO READ  ராணுவ விமானத்திற்கு தேவையான உதிரி பாகங்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் :

33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப்பதக்கத்துக்கு மோதுகிறார்கள். இந்திய தரப்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 125 வீரர், வீராங்கனைகள் டோக்கியோவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘எனக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள்’ -போப் ஆண்டவர் பிரான்சிஸ் :

Shobika

அதிதீவிர பயிற்சிகள் மேற்கொள்ளும் சீன வீரர்கள்-புகைப்படங்கள் உள்ளே…

naveen santhakumar

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் 500cc பைக்குகளின் தயாரிப்பு நிறுத்தம்

Admin