இந்தியா உலகம்

செய்தித்தாள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


செய்தித்தாள்கள் மூலம் கொரோனா குறித்த தகவல்கள் பரவும். ஆனால் செய்தித்தாள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா??

பணத்தின் மூலம் அல்லது செய்தித்தாள்கள் மூலம் வைரஸ் பரவுகிறது என்று வதந்திகள் உலா வருகின்றன உண்மையில் செய்தித்தாள்கள் மூலம் பரவுமா என்ன சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்.

செய்தித்தாள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்று உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் கடந்த வாரமே தெரிவித்துவிட்டனர்

ALSO READ  முழு ஊரடங்கு.... க்ளீடென் ஆப்-பில் அலைமோதும் இளைஞர்கள்... அப்படி என்ன இருக்கு இந்த ஆப்-பில்....

இது குறித்து வேலூர் CMC மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வைராலஜி பேராசிரியர் டி.ஜேக்கப்ஜான்  தி பிரிண்ட் (The Print) இதழுக்கு அளித்த பேட்டியில்:-

இன்றைய சூழ்நிலையில் செய்தித் தாள்கள் வழியாக கொரோனா வைரஸ் பரவுவதற்குச் சாத்தியமுள்ளது என ஒத்துக் கொள்கிறேன்.

செய்தித்தாளை விநியோகிக்கும் நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்து, அவர் விநியோகம் செய்யும் செய்தித்தாளின் மீது தும்மவோ அல்லது இருமவோ செய்திருந்தால் வைரஸ் பரவும் வாய்ப்பிருக்கிறது. 

ALSO READ  இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்தது ஆஸ்திரேலிய !

ஆனால் இதற்கான சாத்தியம் மிகக் குறைவு. நான் இப்போதும் அன்றாடம் செய்தித்தாள்களை வாங்கி வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஒருவேளை நீங்கள் படித்த செய்தித்தாள் வழியாக அல்லது பணத்தின் மூலம் வைரஸ் பரவும் என்ற சந்தேகம் இருந்தால், செய்தித்தாள் படித்த பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவினால் போதும். வைரஸைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 11 பேர் பலி…8 பேர் படுகாயம்…

Shobika

இனிமேலும் பொறுக்க முடியாது- தாலிபான்களை எதிர்த்து களமிறங்கிய பெண்கள்..!

naveen santhakumar

இந்தியாவில் எந்த வயதினர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்…..

naveen santhakumar