உலகம்

டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் கடும் மோதல்-பலர் காயம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன் :

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன்,வெற்றி  பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ளார். வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக ஜோ பிடன் பதவியேற்க இருக்கிறார். கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் அமெரிக்காவில் தாங்கள் அதிபர் பதவி ஏற்ற பின், அடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் தொடங்கிவிட்டனர்.

ஆனால் தோல்வியை ஏற்பதற்கு டிரம்ப் மறுக்கிறார்.மேலும் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார். அதேசமயம், டிரம்பின் ஆதரவாளர்களும் பிடனுக்கு எதிராக பேரணி நடத்தி வருகின்றனர்.

ALSO READ  சீனாவில் கடும் மின் தட்டுப்பாடு தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம்

இந்நிலையில், அதிபர் டிரம்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டன் டிசியில் பேரணியாக சென்றனர். இவர்களுடன் பல அமைப்புகளும் இணைந்தன. டிரம்புக்கு ஆதரவாகவும், தேர்தல் முடிவுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். நேற்று இரவு நடந்த இந்த பேரணியில் திடீரென்று  வன்முறை வெடித்தது.

போராட்டம் நடத்திய ஆன்டிஃபா மற்றும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் குழுக்களுக்கும், டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வன்முறை உருவானது. டிரம்பின் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர். கட்சி கொடிகளை பறித்து தீயிட்டு கொளுத்தினர். டிரம்புக்கு ஆதரவான டி-ஷர்ட்டுகள் விற்பனை செய்த வியாபாரிகளின் மேஜைகளை தூக்கி போட்டு கவிழ்த்தனர். இதனால் இரவு முழுவதும் மோதல் நீடித்தது. 

ALSO READ  ஆப்பிரிக்கவை தடுப்பூசி மருந்துகளை பரிசோதனை செய்யும் கூடமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது: உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆவேசம்....

வாஷிங்டனில் உள்ள 5 பகுதிகளில் பெரும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பை சேர்ந்த பலருக்கும் காயம் ஏற்பட்டது.இதில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொய் சொல்லலாம்.. அதுக்குன்னு “கொரோனா வைரஸ்” பற்றி இப்படி சொல்லலாமா?

Admin

மானின் உருவப் பாதையில் 9 மணி நேர சைக்கிள் பயணம் செய்த நபர்

Admin

கொரோனா பரவலுக்கிடையே சர்வதேச கவனத்தை ஈர்த்த இலங்கை திருமணம்…

naveen santhakumar