உலகம்

மியான்மரில் முடக்கப்பட்ட இணையதள சேவை வரிசையில் தற்போது டுவிட்டர் சேவையும் முடக்கம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

யாங்கூன்:

மியான்மரில் ராணுவத்திற்கும் அந்த நாட்டு அரசிற்கும் மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. அங்கு போராட்டங்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வரும் 7-ந்தேதி வரை ஃபேஸ்புக் பயன்பாட்டுக்கு மியான்மர் ராணுவம் தடை விதித்தது. 

இதன்படி அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு இணையதள சேவை வழங்குனர்களால், பேஸ்புக் சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

ALSO READ  உலகப் புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் தொடரை இயக்கிய Gene Deitchகாலமானார்...

இந்த சூழலில் டுவிட்டர் சேவையும் மியான்மரில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. முன்னதாக மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி லட்சக்கணக்கான பதிவுகள் டுவிட்டரில் வெளியாகி வந்தன. 

இதுதொடர்பாக அந்நாட்டு தகவல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆவணங்களில், “போலியான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முக்கிய கருவியாக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நாட்டின் பொது நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை டுவிட்டர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது” என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தஜிகிஸ்தானின் பல பகுதிகள் எங்கள் நாட்டைச் சேர்ந்தது- சீனா… 

naveen santhakumar

மலைப்பாம்பிடம் பேட்டி எடுத்த பெண் நிருபர்

Admin

கிறிஸ்துமஸை முன்னிட்டு “வியட்நாம்” செல்ல சிறப்பு சலுகைகள் வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி

Admin