உலகம்

உலகம் முழுவதும் கொரோனாவால் லட்சக்கணக்கான குழந்தைகள் இந்த வருட இறுதிக்குள் உயிரிழக்க நேரிடும் ஐநா எச்சரிக்கை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க் கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு காரணத்தால் இந்த வருட இறுதிக்குள் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது. அதேபோல இந்த வருட இறுதிக்குள் லட்சக்கணக்கான மக்கள் கடும் வறுமைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது  என்றும் எச்சரித்துள்ளது.

143 நாடுகளில் கிட்டத்தட்ட 369 மில்லியன் குழந்தைகள் கடும் ஆபத்தில் சிக்கி உள்ளனர். பல குழந்தைகள் பள்ளிகளில் கிடைக்கும் உணவுகளை நம்பியே இருந்துள்ளனர் தற்பொழுது பள்ளிகள் மூடப்பட்டு வீடுகளில் முடங்கி உள்ள காரணத்தால் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

இதுகுறித்து கூறிய ஐ நா சபை தலைவர் அண்டனியோ அட்றஸ்:-

ALSO READ  ஆப்கானிஸ்தானில் திடீரென்று வெடிவிபத்து:

தற்பொழுது உலகம் முழுதும் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் பரவல் காரணமாக லட்சக்கணக்கான குழந்தைகள் கடும் ஆபத்தில் சிக்கி உள்ளார்கள். உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. இதை ஒரு சுகாதார அவசர நிலையாக கருதவேண்டும் தற்பொழுது குழந்தைகளைக் காப்பது மட்டுமே நமது கடமை என்று கூறியுள்ளார்.

சீனாவின் வூஹானில் இருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒன்றரை லட்சம் மக்கள் வரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு!

Shanthi

உலகில் உள்ள கடல்களின் நீர் வற்றி விட்டால் பூமி எப்படி இருக்கும் ? நாசாவின் விபரீத யோசனையில் விளைந்த அனிமேஷன்.

naveen santhakumar

கொரோனா வைரஸ் நியூ வெர்ஷனின் 7 அறிகுறிகள்:

naveen santhakumar