உலகம்

ஏன் தாக்குதல் நடத்தினோம் என்று அமெரிக்கா வருந்தும்: ஈரான் எச்சரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாங்கள் அமெரிக்காவுடன் ராணுவ போருக்கு விரும்பவில்லை, எங்களுடைய முடிவு எதிரி வருந்தும் அளவிற்கு இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர்.

ALSO READ  அமெரிக்காவின் செனட்சபை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாமுக்கு மீண்டும் கொரோனா :

இதனால் பழிக்கு பழி வாங்குவோம் என்று ஈரான் கூறி வரும் நிலையில், நாங்கள் 52 இடங்களை குறிவைத்துள்ளோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மவுசாவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அப்பாஸ் மவுசாவி கூறுகையில் ‘‘அமெரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக உள்ளோம். தளபதி கொல்லப்பட்டதற்கு தெஹ்ரான் பழிக்குழி வாங்கியே தீரும். அதே சமயம் போரை முன்னிலைப் படுத்தாது’’ என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நன்கொடை வழங்கினால் நிர்வாண படம்.. Insta வை அலறவிட்ட மாடல் அழகி..

News Editor

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவருக்கு கொரோனாவா????

naveen santhakumar

13 வயது சிறுமிக்கு தந்தையான 10 வயது சிறுவன்…..

naveen santhakumar