அரசியல் உலகம்

“உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்” – இங்கிலாந்து பிரதமர் வாக்குறுதி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இங்கிலாந்தின் 57-வது பிரதமரான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் ரஷ்யாவுடனான போரில், உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்துள்ளார்.

இங்கிலாந்தின் 57-வது பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை முறைப்படி இங்கிலாந்தின் புதிய பிரதமராக அரசர் 3ஆம் சார்லஸ் அறிவித்ததையடுத்து ரிஷி சுனக்கிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமராக பதவியேற்ற பின் ரிஷி சுனக் தனது முதல் உரையில், “நான் தவறுகளை சரிசெய்ய நியமிக்கப்பட்டேன் என்றும் நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல, செயலால் ஒன்றிணைப்பேன்” என்றும் கூறினார். இதனையடுத்து ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசிய போது ரஷியாவுடனான போரில், உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்துள்ளதாக இங்கிலாந்து பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  முதல்வர்  தலைமையில் தொடங்கியது அமைச்சரவை கூட்டம் ! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மஞ்சப்பை இனி அவமானம் இல்லை; அடையாளம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

naveen santhakumar

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முஸ்லிம்களின் வீடுகளுக்கு சென்று நிதின் கட்காரி விளக்கம்

Admin

3 குழந்தைகள் பெற்று கொள்ள மானியம் – தம்பதிகள் குஷியோ குஷி!

naveen santhakumar