உலகம்

கொரோனா பிடியிலிருந்து இந்தியா விரைவில் விடுதலை பெறும்-அமெரிக்க விஞ்ஞானிகள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:-

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ், சூரிய ஒளி, அதிகமான வெப்பம், ஈரப்பதமான சூழல் ஆகியவற்றில் பரவுவது கடினம். சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்கள், வைரஸ்களின் மரபணுப் பொருள்களை சேதப்படுத்தி, அவை பல்கிப் பெருகும் திறனை முடக்கிவிடும்  அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க உள்துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் (Undersecretary for science and technology at the Homeland Security Department) வில்லியம் பிரையன் (Willian N. Bryan) நேற்று வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Courtesy.

ஒருவரின் எச்சில், நுரையீரல் சளியிலிருந்து எடுக்கப்பட்ட வைரஸை இந்த ஆல்கஹாலில் சோதிக்கும்போது அது சில வினாடிகள்கூட உயிர்வாழவில்லை.

அதேபோல், அதிகமான சூரிய வெளி, வெப்பம், ஈரப்பதமான சூழல் இருந்தால் கொரோனா வைரஸ் வேகமாக உயிரிழக்கும், பரவும் வேகமும் குறையும். அதிலும் நேரடியான சூரிய ஒளியில் வேகமாக கொரோனா வைரஸ் உயிரிழக்கும். ஐஸோபுரோபைல் ஆல்கஹாலும் கொரோனா வைரஸை 30 வினாடிகளில் கொல்லும் திறன்படைத்தது.

ALSO READ  பிரபல கால்பந்து வீரர் மாரடோனா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது :

எங்களின் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட படி, சூரிய ஒளி படும்போதும், வெயில் அதிகரிக்கும் போதும் தரைத்தளத்திலும், காற்றிலும் கொரோனா பரவும் வேகம் குறைந்து கொரோனா வைரஸ் அழிந்து உயிரிழப்பும் குறையும். இதேபோன்ற சூழல்தான் அதிகமான வெப்பம், ஈரப்பதமான சூழிலும் கரோனா வைரஸ் அதிகமாக அழியும்.இந்த 4 சூழலும் இருந்தால் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறையும். 

அதாவது சூரிய ஒளி, வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் செல்லும் போது கொரோனா வைரஸ் உயிர்வாழும் காலம் பாதியாகக் குறையும். அதேபோல ஈரப்பதமான சூழலும் இருந்தால் வழக்கமாக தரைத்தளத்தில் 18 மணிநேரம் வாழும்தன்மை கொண்ட கொரோனா வைரஸ் சில நிமிடங்களில் இறந்துவிடும்.

அதிகமான சூரிய ஒளி, 75 பாரன்ஹீட் வெப்பம், 80 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் கொரோனா வாழும் காலம் 18 மணிநேரத்திலிருந்து 6 மணிநேரமாகக் குறையும், சில நிமிடங்களிலும் கொரோனா வைரஸ் உயிரிழக்கலாம். இயற்கை அழிக்கும் வழிகள் இருப்பதால், நாம் கொரோனா வைரஸ் காலத்தில் சமூக விலகலையும், முகக்கவசம் அணிவதை தவிர்கக்கூடாது.

ALSO READ  இணையத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்.

70 முதல் 75 பாரன்ஹீட் வெப்பமும் 20 சதவீதம் ஈரப்பதமும் இருந்தாலே கொரோனா வைரஸின் ஆயுள்காலம் பாதியாகக் (Half-Life) குறைந்துவிடும். அதேபோல U.V. கதிர்களும் கொரோனா வைரஸ் பரவும் சங்கிலியை உடைக்கும் திறன் படைத்தவை.

95 பாரன்ஹீட் வெப்பம் இருந்தால் கரோனா வைரஸ் ஆயுள் வெறும் 60 நிமிடங்கள் மட்டுமே. இந்த ஆய்வுகள் அனைத்தும் மேரிலண்டில் உள்ள டிஹெச்எஸ் அதிநவீன ஆய்வுக்கூடத்தில் செய்யப்பட்டன. டிஹெச்எஸ் அதிநவீன ஆய்வுக்கூடம் அமெரிக்காவில் ஒன்று மட்டுமே இருக்கிறது.

இருப்பினும் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு பிற விஞ்ஞானிகளால் மதிப்பீடு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் பரவல் பதுங்குகுழிகளை திறக்கும் இஸ்ரேல் அரசாங்கம்….

naveen santhakumar

ஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- ஆய்வாளர்கள் எச்சரிக்கை….

naveen santhakumar

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் :

Shobika