உலகம்

துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரிக்கு வெள்ளைமாளிகை எச்சரிக்கை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவில் கடந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில், ஜோ பைடன் அமெரிக்க அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரும் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். இதன்மூலம் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் பெண் துணை அதிபர், தெற்காசியாவைச் சார்ந்த முதல் துணை அதிபர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளைப் பெற்றார் கமலா ஹாரிஸ். 

ALSO READ  வழக்கத்தை விட இன்று பெரிஜீ (Perigee) பெரிதாகத் தெரிந்தது.

கமலா ஹாரிஸின் சகோதரி மகள் மீனா ஹாரிஸ் அமெரிக்காவில் வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளராக இருந்து வருகிறார். இவர் ‘Kamala and Maya’s Big Idea’ என்ற நூலை எழுதியுள்ளார். மேலும் Phenomenal என்ற ஆடை தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனம் வெளியிட்ட ஆடையில் கமலா ஹாரிஸை குறிப்பிடும் வகையில் ‘Vice President Aunty’ என அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதனைக் கண்டித்த வெள்ளைமாளிகை அது நடப்பு சட்டத்திற்கு எதிரான செயல் எனத் தெரிவித்திருந்தது.

இதுபோன்று துணை அதிபர் பெயரை தனிப்பட்ட முறையிலும் வணிக ரீதியாகவும் மீனா ஹாரிஸ் பயன்படுத்தி வரும் போக்கு வெள்ளமாளிகை அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மீனா ஹாரிஸ் தனது பெயரை வளர்த்துக்கொள்ள, கமலா ஹாரின் பிரபலத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் மேலும் இந்த நடவடிக்கையை மீனா ஹாரிஸ் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வெள்ளைமாளிகை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனோ இருந்தாலும் பரவாயில்லை. சீன பெண்ணை மணந்த இந்தியர்.

Admin

நவாஸ் ஷெரீப்பை பாகிஸ்தான் கொண்டுவர தீவிர ஏற்பாடு:

naveen santhakumar

பதிவியேற்பு விழாவிற்கு டிரம்புக்கு அழைப்பு விடுக்கும் ஜோ பிடன் :

naveen santhakumar