உலகம்

உலக சுகாதார அமைப்பின் விஞானிகள் குழு சீனாவிற்குள் நுழைய தடை..! ஜி ஜின்பிங் அதிரடி 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக சுகாதார அமைப்பின் விஞானிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய சீன அரசு தடை விதித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின்  வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா  வைரஸ் என்ற நோய்க்கிருமி  உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனையடுத்து கொரோனா வைரஸ் மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். அதன்படி தற்போது கொரோனா வைரஸ் மரபியல் மாற்றம் அடைந்து புதிய வகை கொரோனா வைரஸாக உலகம் முழுவதும் பரவிவருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவ சீனா தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது. இதனிடையே உலக நாடுகளில் அழுத்தத்தை அடுத்து சீனாவில் ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது.

ALSO READ  ஈரானில் அரசுக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்ற பிரிட்டன் தூதர் கைது

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சுக் குழு தங்கள் நாட்டுகுள் நுழைய கடந்த ஆண்டு இறுதியில் சீன அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சியை மேற்கொள்ள இந்த மாதம் சீனா செல்ல திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், திடீர் திருப்பமாக உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய சீன அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும் விஞ்ஞானிகள் சீனாவுக்குள் நுழைய விசா வழங்காமல் அந்நாட்டு அரசு தாமதித்து வருகிறது.

#XIjinping #jinping #chinacoronavirus #who #tamilthisai #chinavirus #china  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு …..

naveen santhakumar

ஓய்வு பெற்றது கம்போடியாவின் ஹீரோ மகாவா எலி…! 

naveen santhakumar

எண்ணெய்க் கப்பல் தீ விபத்து….. கேப்டனுக்கு சம்மன்……

naveen santhakumar