உலகம் தொழில்நுட்பம்

மனித குலத்திற்கு ஏற்படப்போகும் பேரிழப்பு… ஷாக் ரிப்போர்ட்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் முழு அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும்  சமூக விலகலை கடைபிடிக்க கூறி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் உலக அளவில் வர்த்தக முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உலகப் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு காரணமாக இந்த வருட இறுதிக்குள் பலர் வேலை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் மனித ஆற்றலை குறைக்கும் நடவடிக்கைகளை பல நிறுவனங்கள் தற்போது முன்னெடுக்க தொடங்கிவிட்டன.

தற்பொழுது ஐடி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த ஊழியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வீடுகளில் இருந்தே செய்ய இயலாத பணிகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் ரோபோக்களை பணியமர்த்தி உள்ளது. இவ்வாறு ரோபோக்களை பணியமர்த்துவன் மூலமாக மனித ஆற்றலும், தேவையும் குறைகிறது. அதேவேளையில் ரோபோக்களுக்கு சம்பளம் தர வேண்டிய பிரச்சனையும் இல்லை. இதையடுத்து பல்வேறு நிறுவனங்கள் ரோபோக்களின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளது.

இதுகுறித்து Rise of the Robots: Technology and the Threat of a Jobless Future என்ற நூலின் ஆசிரியரும் Futurist-மான மார்டின் ஃபோர்டு கூறுகையில்:-

ALSO READ  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் அசத்தலான 'டெஸ்ட் கிட்' :

தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த நோய் பரவல் ஆட்டோமேஷன் துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது, அதேபோல நுகர்வோரின் விருப்பங்களையும் முற்றிலுமாக மாற்றி அமைக்க உள்ளது. இந்த சமூக இடைவெளி தொடர்ந்து கடைபிடிக்கப்படுமானால் மனிதர்களுக்கான தேவைகள் முற்றிலும் இல்லாமல் போய் அவ்விடங்களை ரோபோக்கள் ஆக்கிரமிக்கும் என்று கூறியுள்ளார்.

தற்போது அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் தரைகளை துடைக்க ரோபோக்களை பணியமர்த்தி உள்ளது.

தென் கொரியா நோயாளிகளின் உடல் வெப்பநிலையை சோதிக்க, அவர்களுக்கு ஹேண்ட் சேனிடைசர் வழங்கவும் உணவு வழங்கவும் ரோபோக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

சீனா நீண்டகாலமாக நோயாளிகளுக்கு உணவு வழங்க மற்றும் அவர்களை கண்காணிப்பதற்கு ரோபோக்களை பணியமர்த்தி உள்ளது. தற்போது இந்தியாவில் கூட சில பகுதிகளில் நோயாளிகளைக் கண்காணிக்க அவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் உணவுகள் வழங்கவும் ரோபோக்களை பணியில் ஈடுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  வீட்டிலிருந்தபடியே மருத்துவர்களிடம் ஆலோசனை பெற புதிய மொபைல் ஆப்...

ஏற்கனவே ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 2022ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தது. ஒருவேளை 2021 வரையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது ரோபோக்களின் தேவை பன்மடங்கு அதிகரிக்கும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.

டென்மார்க்கை சேர்ந்த நிறுவனம் ஒன்று UVD ரோபோட்களை (Ultra-Violet Disinfection) நூற்றுக்கணக்கில் சீனா மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல உலகின் மிகப்பெரிய உணவு சங்கிலி நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் உணவு தயாரிக்கவும், பரிமாறவும் ரோபோக்களை பணியாற்றுவதற்கான ஆலோசனையில் உள்ளது. 

தற்போது அமேசான் நிறுவனம் அதன் கிடங்குகளில் உள்ள பொருட்களை கையாள்வதற்காக ஏராளமான ரோபோக்களை பயன்படுத்தி வருகிறது.

மனிதர்களுக்கான தேவை முற்றிலுமாக குறைந்து அனைத்து துறைகளிலும் ரோபோக்கள் பணியமர்த்தப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. மனித ஆற்றல் மிகப் பெரிய ஆபத்தில் உள்ளது என்பது இவற்றின் மூலம் தெரியவருகிறது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய் மல்லையாவின் வெளிநாட்டு சொத்துக்களை முடக்க முடிவு :

naveen santhakumar

நாம் தூங்கும் போது கொரோனா வைரஸும் தூங்குகிறது- பாக் அரசியல்வாதி பேச்சு..

naveen santhakumar

மாஸ்க் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்ட அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு ‌அபராதம் :

Shobika