உலகம்

மாயன் காலண்டர்படி இந்த வருடம்தான் 2012… உலகம் முடிவுக்கு வருகிறதா?…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜூன் 21ம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என மாயன் காலண்டர் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறது. இந்நிலையில், 2020 ஜூன் 21ம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என மாயன் காலண்டர் கூறுகிறது. முன்னதாக 2012ல் உலகம் அழியும் என மாயன் காலண்டர் தெரிவித்திருந்தது. ஆனால் அவர்களின் காலண்டர்படி 2020ஆம் ஆண்டு பலன் 2012 ஆம் ஆண்டு என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டதாக நம்பப்படும் மாயன் இனத்தினர், முதல் மனித நாகரிக இனத்தினர் என்று கூறப்படுகிறது. (இவர்கள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும் இங்கிருந்து மெக்சிகோவுக்கு சென்றார்கள் என்றும் கூறப்படுகிறது). ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன் இனத்தவர்கள் வானியல் சாஸ்திரம், ஜோதிடத்தில் மிகச்சிறந்து விளங்கினர்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே, காலண்டரைத் தயாரித்து இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளைக் கொண்டதாக இருந்தது.

சித்திர எழுத்து வடிவம், கலை, கட்டிடக் கலை, கணிதம், நாட்காட்டி மற்றும் வானியல் ஞானம் ஆகியவற்றுக்காக மெதோமெரிக்கன் நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது.

ALSO READ  தமிழகத்தை மிரட்டும் கருப்பு பூஞ்சை; 5 ஆயிரம் மருந்து குப்பிகள் வாங்க உத்தரவு!

மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டி வரும் ஜூன் 21-ம் தேதியுடன் நிறைவடைவதால், அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது கிரிகோரியன் காலண்டர் முறையைத்தான் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். 1582-ம் ஆண்டுக்கு முன் இந்த காலண்டர் பயன்பாட்டுக்கு வரும் முன், உலகில் பல்வேறு வகையான காலண்டர்கள் காலத்தைக் குறிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதில் முக்கியமானது மாயன் காலண்டர், ஜூலியன் காலண்டர்.

சூரியனை பூமி சுற்றிவரும் காலத்தை அடிப்படை வைத்து கிரிகோரியன் காலண்டர் வடிவமைக்கப்பட்டது. இதைத்தான் வல்லுநர்கள் பலரும் அறிவியல்பூர்வமானது என ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆனால், கிரிகோரியன் காலண்டர் அறிமுகப்படுத்தும்போது, ஜூலியன் காலண்டரின் 11 நாட்களைக் கணக்கிடவில்லை. இழந்த அந்த 11 நாட்களை வைத்துக் கணக்கிட்டால் ஜூலியன் காலண்டர்படி நாம் 2020 ஆம் ஆண்டில் இருக்கவில்லை. 2012-ம் ஆண்டில்தான் இருக்கிறோம் என்று சில வானியல் கணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

விஞ்ஞானி பாலோ டகாலோகுயின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில்:-

ஜூலியன் காலண்டரை நாம் பின்பற்றும்போது அந்த மாயன் காலண்டர்படி நாம் இப்போது 2012-ம் ஆண்டில்தான் இருக்கிறோம். ஜூலியன் காலண்டரில் இருந்து கிரிகோரியன் காலண்டருக்கு மாறும் ஆண்டு ஓராண்டில் 11 நாட்களைக் குறைத்துக் கணக்கிட்டுள்ளோம்.

ALSO READ  உலகில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

அதாவது கடந்த 1752-ம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் பயன்பாட்டுக்கு வந்தது. 2020 ஆம் ஆண்டிலிருந்து 1752 ஆம் ஆண்டைக் கழித்தால் ஏறக்குறைய 268 ஆண்டுகளாக நாம் 11 நாட்களைக் கணக்கிடவில்லை.

அப்படியென்றால் 11 x 268 பெருக்கினால் 2,948 நாட்களைச் சேர்க்க வேண்டும். 2,948 நாட்களை 365 நாளில் வகுத்தால் (365 நாட்கள் – ஓராண்டு) 8 ஆண்டுகள் கிடைக்கிறது. அதாவது 8 ஆண்டுகளை நாம் கணக்கிடவில்லை. அதாவது தற்போது இருக்கும் 2020-ம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகளைக் கழித்தால் 2012-ம் ஆண்டு. ஜூலியன் காலண்டர் படி நாம் தற்போது 2012-ம் ஆண்டில் இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாசா விஞ்ஞானி கூறுகையில்:-

‘இதற்கு முன் 2000, 2003, 2012ல் உலகம் அழியப்போகிறது என கூறப்பட்டது. அது நடக்கவில்லை. தற்போது 2020ல் உலகம் அழியும் என கூறுகின்றனர். இதற்கும் ஆதாரம் இல்லை. எனவே இப்போதும் நடக்காது’ எனக்  கூறியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவின் கதையை மாற்றியவர்கள்….ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ்….

naveen santhakumar

கொரோனோ வைரஸ் பாதிப்பு… தனி விமானம் அனுப்பும் அமெரிக்கா

Admin

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது:

naveen santhakumar