உலகம்

போலீசிலிருந்து தப்ப நினைத்து தலைகீழாக அந்தரத்தில் தொங்கிய பெண்- CCTV காட்சிகள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஓஹியோ:-

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெஸிக்கா பூமர்ஷைன் (Jessica Boomershine (42)).

இவர் கடந்த மாதம் மியாமிஸ்பர்க்-ல் உள்ள 85 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மான்ட்கோமரியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலைகள் ஜெஸிக்கா பூமர்ஷைன் போலீசில் இருந்து தப்புவதற்காக சுவரின் மேலே இருந்த துளை வழியே தப்பி செல்ல முயற்சிக்கும் பொழுது மாட்டிக்கொண்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Courtesy ABC

ஜெஸிக்கா விசாரணைக்காக அங்கிருந்த நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். அப்போது அங்கு கைதிகள் காத்திருக்கும் அறையில் வைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்த நாற்காலி வழியே மேலே ஏறி உடைத்து சுவற்றின் மேலே இருந்த ஒரு பெரிய துளை வழியாக வெளியே தப்பிக்க முயற்சி செய்தார்.

ALSO READ  104 வயது முதியவருக்கு வந்த 70 ஆயிரம் காதல் கடிதங்கள்…

ஆனால் அங்கிருந்த சீலிங்கை உடைத்துக்கொண்டு கீழே விழாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை சக கைதிகளும் போலீசாரும் கவனித்து விட்டனர். அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்த ஜெஸிக்காவை உடனடியாக போலீசார் கீழே பிடித்து இழுத்து கைது செய்தனர். 

ALSO READ  அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் இந்திய பெண் - அதிபர் பைடன் பரிந்துரை…!

அவர்களை பிடித்து இழுக்கும்போது சீலிங்கை உடைத்துக் கொண்டு கீழே உள்ள குப்பை தொட்டியில் விழுந்தார் ஜெஸிக்கா.

ஏற்கனவே மியாமிஸ்பர்க் அருகிலுள்ள முதியவர் ஒருவரின் வீட்டை தாக்கியது இப்போது போலீசாரிடம் தப்ப முயன்றது என்று இரு வழக்குகள் ஜெஸிக்கா மீது பதியப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகின் சிறந்த மேயர் விருதுக்கு சிரியா நாட்டைச் சேர்ந்த லைலா முஸ்தஃபா தேர்வு

News Editor

உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு..

Shanthi

“மானத்த விட லேப் பெருசு”; பன்றியிடம் இருந்து தனது லேப்டாப்பை மீட்க, நிர்வாணமாக ஓடிய தாத்தா..! 

naveen santhakumar