உலகம்

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்று உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘குழந்தை தொழிலாளர் மீதான நெருக்கடியின் தாக்கம்’ (The Impact Of The Crisis On Child Labour). 

பின்னணி:-

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கடந்த 2002ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி யை உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு  தினமாக அறிவித்தது. இதனை எடுத்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் நோக்கில் ஐ.நா.சார்பில் ஆண்டு தோறும் ஜூன் 12ல் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு உலக அளவில் 152 மில்லியன் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர் என்று கூறுகிறது அதில் 72 மில்லியன் குழந்தைகள் மிகவும் அபாயகரமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

ஆனால் கடினமான வேலைகளுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களையே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கல்விதான் கற்க வேண்டும் என ஐ.நா.வின் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமைப்பு கூறுகிறது.

குழந்தை தொழிலாளர்கள்:-

தீண்டாமை, குழந்தைத் தொழிலாளர் முறை, கொத்தடிமை முறை இவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், சமூகத்தில் அவற்றின் எச்சங்கள் இன்னமும் ஆங்காங்கே இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த மூன்று கொடியச் செயல்களிலும் அதிக அளவில் பாதிக்கக்கூடியவர்களாகக் குழந்தைகள்தான் இருக்கிறார்கள்.

மனித வாழ்வின் குழந்தைப் பருவம் என்பது ஒரு பொற்காலம். பள்ளி சென்று கல்வி  பயின்று, ஆடல், பாடல், விளையாட்டு என்று மகிழ்ச்சியாக செல்ல வேண்டிய குழந்தைப் பருவத்தில் வேலைக்கு செல்வதென்பது உடல் ரீதியாக, உளவியல் அல்லது மனரீதியாக மற்றும் உணர்வு மற்றும் சமூகரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

ALSO READ  "ஒரு கையில் துப்பாக்கியோடு மறுகையில் பாலோடும் அவர் ஓடி வந்த வேகத்தை வாழ்நாளுக்கும் மறக்க முடியாது!"- பால் வாங்கி தந்த போலீஸ்காரருக்கு குழந்தையின் தாயார் நன்றி.. 

இந்தியாவில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகம். விவசாயம், தீப்பெட்டி, செங்கல் சூளை, டெக்ஸ்டைல் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில் விடுமுறையின்றி, ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலைபார்க்கின்றனர். கொத்தடிமைகளாகவும் குழந்தைகள் இருக்கின்றனர்.

நேரடி குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் மறைமுக குழந்தை தொழிலாளர் முறை:-

குழந்தை தொழிலாளர் முறை பல வடிவங்களில் உள்ளது. நேரடி குழந்தை தொழிலாளர் முறை, மறைமுக குழந்தை தொழிலாளர் முறை. 

சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத இடங்களில் குழந்தைகளை பணியில் அமர்த்தி வேலை செய்ய வைத்தல் மறைமுக குழந்தை தொழிலாளர் முறை. இக்குழந்தைகள் பெரும்பாலும் பள்ளி செல்லாதவர்கள். இம்முறையில் இன்னொரு நிலையில் இடம்பெயர்ந்து வேலை செய்பவர்கள். வேலை வாய்ப்புக்காக கிராமம், நகரங்களில் இருந்து இடம்பெயர்ந்து செல்லும் குடும்பங்கள், தங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்து செல்கின்றனர். இதில் பல குழந்தைகள் பள்ளி செல்லாமல் பெற்றோர் பார்க்கும் பணிகளை பார்க்கின்றனர். அல்லது வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு முறையான கல்வி மட்டுமல்ல முறையான குழந்தைப் பருவமே கிடைப்பதில்லை.

இதில் மிகவும் கொடூரமான, பரிதாபமானது கொத்தடிமை முறை. பெற்றோர் வாங்கிய கடனுக்கு ஈடாக பெற்றோருடன் குழந்தையும் அதே தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் கொத்தடிமை குழந்தை தொழிலாளர்கள்.

அதேபோல குடும்பத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள். தவறான வழியில் பிறந்தவர்கள், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் குழந்தைகள் அனாதைகளாக திரியும் நிலை ஏற்படுகிறது. இவர்கள் அனாதை குழந்தைகள் இவர்களுக்காக கேட்பதற்கு யாரும் இல்லாத காரணத்தால் இவர்கள் பல்வேறு வகையில் சீரழிக்கப்படுகிறார்கள்.

ALSO READ  அமெரிக்க வெளியுறவு மந்திரி இந்தியா வருகிறார் :

இதில் பெண் குழந்தைகளின் நிலையோ மிகவும் மோசம் பல குடும்பங்களில் குடும்ப வேலைகளை பார்ப்பதற்காகவே பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புபடுவதே இல்லை.

சட்டத்தில் உள்ள குறைபாடுகள்:-

மத்திய அரசு பென்சில் அமைப்பு மூலம் தனியாக சிறப்பு குழு அமைத்து குழந்தை தொழிலாளர் குறித்து கண்காணித்து வருகிறது. பொதுமக்களும் pencil.gov.in என்ற இணையத்தில் புகார்களை பதிவு செய்யலாம். இதன் மூலமாக மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

அதேவேளையில், இந்தியாவில், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்திலேயே மிகப்பெரிய குறை உள்ளது.

14 வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகள், தங்களின் பாரம்பரியத் துறையில் வேலைசெய்வது சட்டப்படி குற்றமில்லை. இங்கே, 14 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்களையும் குழந்தைகளாகக் கருதாமல், அவர்களை வேலை செய்ய இந்த சட்டம் அனுமதியளிக்கிறது. உண்மையில் இந்த சட்டம் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

உலக அளவில் குழந்தை தொழிலாளர்கள் முறையை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு:-

உலகம் முழுவதும் கொரோனாவால் மிகப் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது உலக அளவில் பொருளாதாரம் முற்றிலுமாக சரிந்து சீர்குலைந்துள்ளது. இந்த பொருளாதார பின்னடைவு தொழிலாளர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தால் ஏழை குழந்தைகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். இது பலரை குழந்தை தொழிலாளர் முறைக்கு தள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ் எனவே குழந்தைகள் ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இதை நாம் அனைவரும் உணர்ந்து குழந்தைகளை பாதுகாப்போம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகின் சிறந்த மேயர் விருதுக்கு சிரியா நாட்டைச் சேர்ந்த லைலா முஸ்தஃபா தேர்வு

News Editor

அமெரிக்காவின் செனட்சபை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாமுக்கு மீண்டும் கொரோனா :

Shobika

வங்காள தேசத்தில் அதிகரிக்கும் கொரோனாவால் மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு :

Shobika