உலகம்

உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்று ஜூன் 17ம் தேதி உலகம் முழுவதும் உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினமாக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த வருடத்திற்கான கருப்பொருள் “Food.Feed.Fiber”.

உலகமுழுவதும் விளைநிலங்கள் பாலைவனமாதல் நிலம் சீரழிதல்  மற்றும் வறட்சி ஆகியவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதவும், அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து  படிப்பிக்கவும் ஐநா ஜூன் 17ஆம் தேதியை உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினமாக 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் அறிவித்தது. 1995ம் ஆண்டு ஜனவரி A/RES/49/115 பிரகடனப்படி (January 30, 1995 by the United Nations General Assembly resolution) பாலைவனமாவதற்கும், வறட்சிக்கும் எதிரான போராட்ட தினமாக ஜுன் 17ம் தேதி அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

ALSO READ  ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சத்தமாக பேசிய 5 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யர்:-

இன்றைய காலகட்டத்தில் முன்பு விளையும் நிலமாக இருந்த இரண்டு பில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்கள் வறண்டு பாலைவனமாக மாறி விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு விளைநிலங்கள் சுருங்கி வருவதன் காரணமாக 2030 ஆம் ஆண்டில் உலக மக்களின் உணவுத் தேவையை கருத்தில்கொண்டு 300 மில்லியன் ஹெக்டேருக்கு அதிகமான விளைநிலத்தின் தேவை உள்ளது.

ALSO READ  மியான்மரில் அத்துமீறும் ராணுவம்; உலகத் தலைவர்கள் கண்டனம்!

ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய பாலைவனம் எனப்படும் சகாரா பாலைவனத்தில் கூட நீரூற்றுக்கள் காணப்பட்டதாக வரலாற்று நமக்கு சொல்கிறது. செழிப்பான பகுதியாக இருந்து பின் நாட்களில் வறண்ட பாலைவனமாக மாறிய சகாரா போன்று உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது விளைநிலங்கள் பாலைவனமாக மாறி வருகிறது.

உலகை, இயற்கையை நேசிக்கும் அனைவரும் சுயநலமாய் சுரண்டி தின்னாமல் நம் அடுத்த தலைமுறைக்கு வாழத் தகுதியான இடமாக இந்த புவியை விட்டு செல்ல வேண்டிய கடமை உள்ள அனைவருக்கும் முக்கியமான நாள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மருந்து : சீன சுகாதார கமிஷன்

Admin

போதும்… போதும்… வாங்க பூமிய காப்பாத்துவோம் – இங்கிலாந்து இளவரசர் வில்லியம்

News Editor

அமெரிக்கா-தைவான் இடையேயான ஒப்பந்தத்தால் எரிச்சலடையும் சீனா:

naveen santhakumar