உலகம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கம்யூனிச நாடான சீனாவிலிருந்து பரவியதாலோ என்னவோ இந்த கொரோனா வைரஸ் ஒரு பொதுவுடைமை வைரஸ் ஆக பரவுகிறது. அண்டார்டிகா தவிர ஏனைய அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது கொரோனா.

இந்த வைரஸ் அடித்தட்டு மக்களை மட்டுமின்றி உலக தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முக்கிய உலகத் தலைவர்கள் குறித்து பார்க்கலாம்.

ஈரான்:-

முதலில் ஈரான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் இராஜ் ஹரிர்சி-க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது இவர் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

அடுத்ததாக ஈரான் நாட்டு துணை அதிபர் மஷௌமேஹ் எப்டேகர் (Masoumeh Ebtekar) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவரும் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஈரானை சேர்ந்த இரண்டு எம்பிக்கள் பதேமே ரபார், முகமது அலி ரமாசானி ஆகியோர் கொரோனா தொற்றால் இறந்து விட்டனர்.

ALSO READ  பிரபல பாலிவுட் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !

இவர்களைத் தவிர, மேலும் 20 எம்பிக்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனி வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரிட்டன்:-

பிரிட்டனின் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் ஓரளவு குணமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இத்தாலி:-

ஐரோப்பாவில் மிகவும் மோசமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது இத்தாலி.

இத்தாலி நாட்டில் உள்ள ஜனநாயக கட்சியின் தலைவரான நிக்கோலோ ஜிங்காரீட்டி-க்கு (Nicola Zingaretti) கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது இவரும் தனி வார்டில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ALSO READ  கொரோனா தடுப்பூசியில் பசுவின் ரத்தம் உள்ளதா ?  இந்து மகா சபை குடியரசு தலைவருக்கு கடிதம்...!

ஃபிரான்ஸ்:-

பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் ஃப்ராங்க் ரீஸ்டர்-க்கும் (Franck Riester) கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர் கடந்த வாரம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை காண சென்றபோது அவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரும் தற்போது தனி வாட்டில் வைக்கப்பட்டுள்ளார். இவரைத் தவிர ஃபிரான்ஸ் எம்பிக்கள் 5 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது.

ஸ்பெயின்:-

ஸ்பெயின் நாட்டின் வோக்ஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜேவியர் ஒர்டேகா ஸ்மித் (Javier Ortega Smith) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் சமீபத்தில் ஒரு மாநாட்டில் பங்கேற்க சென்றபோது அவருக்கு தோற்று ஏற்பட்டதாக தெரிகிறது. இதேபோல ஸ்பெயினை சேர்ந்த நாடாளுமன்ற எம்பிகள் சிலருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இஸ்ரேல் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை…

naveen santhakumar

லெபனானில் சக்திவாய்ந்த 2000 டன் குண்டுவெடிப்பு… 

naveen santhakumar

ஆபத்தை விளைவிக்கும் ஸ்கல்-பிரேக்கர் சேலஞ்ச்… மருத்துவர்கள் எச்சரிக்கை

Admin