உலகம்

இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க விரும்புகிறோம்- தாலிபான் அறிவிப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க விரும்புவதாக தாலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தோஹாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் அரசியல் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன்:-

ஆஃப்கானிஸ்தானின் தேசிய நலன் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பெற விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் ஆப்கானிஸ்தானை புனரமைப்பதில் இந்தியாவின் ஒத்துழைப்பை வரவேற்கிறோம். அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள தங்கள் நாட்டை மீட்கவே போராடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தங்களில் எல்லைக்கு அப்பால் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று கூறினார். 

ALSO READ  பெண் செய்தியாளர் பரிதாபமாக சுட்டுக்கொலை:

 கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் தாலிபன்கள் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது அதில் முக்கிய உறுப்பினராக இந்தியா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு கடந்த வாரம் ஆப்கானிஸ்தானுக்கு என அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ஸல்மே கலீல்சாத் (Zalmay Khalilzad)  கடந்த வாரம் இந்தியா வந்த இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம் ஆகியோரை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி அபார வெற்றி !

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாரா ஒன்றில் நடைபெற்ற தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சீக்கியர்கள் பலர் உயிரிழந்தனர் இந்த தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். இதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஆப்கானிஸ்தான் நாட்டில் பல்வேறு புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா சார்பில் ஆப்கானிஸ்தானில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டது.

இந்நிலையில் தீவிரவாதிகளாக இருக்கும் தாலிபான்கள் தற்போது அமைதி குறித்து பல்வேறு நாடுகளுடன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்பிரிக்கவை தடுப்பூசி மருந்துகளை பரிசோதனை செய்யும் கூடமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது: உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆவேசம்….

naveen santhakumar

மது அருந்தினால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதா??? என்ன சொல்கிறது WHO???

naveen santhakumar

சிறுநீருக்கு பதிலாக ஆல்கஹாலை வெளியேற்றும் பெண்- மருத்துவர்கள் அதிர்ச்சி…

naveen santhakumar