உலகம்

பிரபல மல்யுத்த வீரர் லூக் ஹார்ப்பர் மரணம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் WWE மல்யுத்தமும் ஒன்று.இந்த விளையாட்டிற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த விளையாட்டில் உள்ள பிரபலமான வீரர்களில் லூக் ஹார்ப்பரும் ஒருவர். இவர் “வயட் பெம்லி” என்ற பெயருடைய குழுவுடன் இணைந்து மல்யுத்தத்தில் பங்கேற்று வந்தார்.பின்னர் அந்த குழுவில் இணையாமல் தனியாகவே போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

ALSO READ  தந்தையை கொன்ற 3 மகள்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு…

லூக் ஹார்ப்பரின் உண்மையான பெயர் “ஜானத்தன் ஹுபர்”. 41 வயதான லூக் ஹார்ப்பர் மல்யுத்த விளையாட்டில் பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் 2019-ம் ஆண்டு WWE மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 

இந்நிலையில், நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த லூக் ஹார்ப்பர் நேற்று உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மனைவி அமேண்டா உறுதிபடுத்தியுள்ளார்.லூக் ஹார்ப்பரின் மறைவுக்கு WWE மல்யுத்த வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மேலும் இது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபரானார் முன்னாள் நீதிபதி….

naveen santhakumar

உருவகேலியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்

Admin

பாகிஸ்தானின் முன்னாள் அதிபருக்கு உடல்நலக்குறைவு :

Shobika