சினிமா

சல்மான் கான் வெளியிட்ட அறிக்கை…அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சல்மான் கான் பிரபுதேவா இயக்கும் ராதோ படத்தில் நடித்துள்ளார். மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ‘ராதே’. ‘வெடரன்’ என்ற கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும் இப்படத்தின் படபிடிப்புகள் முடிந்து, கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருந்த நிலையில் ‘ராதே’ படத்தின் தொலைக்காட்சி, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் ரூ.230 கோடிக்கு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு சல்மான் கான் விற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் படம் ஓடிடியில் வெளியாகிவிடுமோ என்று திரையரங்க உரிமையாளர்களுக்கிடையே கலக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நடிகர் சல்மான் கான்  இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

ALSO READ  தமிழ் சினிமாவில் ரஜினிக்கு மட்டுமே கிடைக்கும் அங்கீகாரம்

அதில் “அத்தனை திரையரங்க உரிமையாளர்களுக்கும் பதில் சொல்ல நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்கு மன்னிக்கவும். இந்தக் காலகட்டத்தில் இது மிகப்பெரிய முடிவு. திரையரங்க உரிமையாளர்கள் என்ன மாதிரியான நிதிப் பிரச்சினைகளில் இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது.

‘ராதே’ படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதன் மூலமாக அவர்களுக்கு உதவ நினைக்கிறேன். அதற்குக் கைமாறாக, ‘ராதே’ படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் மீது உச்சபட்ச அக்கறையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். படம் ஈகைத் திருநாள் அன்று வருவதாக முன்னர் கூறியிருந்தோம். அதன்படி இந்தாண்டு ஈகைத் திருநாள் அன்று படம் வெளியாகும். ‘ராதே’ திரைப்படத்தை இந்த வருடம் ஈகைத் திருநாள் அன்று திரையரங்குகளில் பார்த்து ரசியுங்கள். நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடிச்சுதூக்கிய தூக்குத்துரை- மாஸ் சாதனை ; கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

naveen santhakumar

சிலம்பம் கற்று வரும் விஜே ரம்யா!…

naveen santhakumar

பாலிவுட் குயின் கத்ரீனா கைஃப் பிறந்தநாள் இன்று

naveen santhakumar