உலகம்

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் அல்ட்ரியா தியேட்டரின் வெளியே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த சமயம் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தியதாக 19 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.

விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோருக்கு வயது 18 மற்றும் 36 ஆகும். மேலும் 31 வயதான நபருக்கு பலத்த காயமும், நான்கு பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன. இந்நிலையில் திடீர் துப்பாக்கி சூடு காரணமாக சிறுமி ஒருவர் காரின் மீது மோதி விபத்தில் சிக்கினார். மேலும் பலர் தள்ளுமுள்ளில் சிக்கி காயமடைந்தனர்.


Share
ALSO READ  சரித்திரம் படைத்த ஆஸ்கர் பிஸ்டோரியஸ் பிறந்த தினம் - நவம்பர் 22:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யார் இந்த தலிபான்கள்? பாகிஸ்தான் ஆதரவுடன் உருவானது எப்படி?

naveen santhakumar

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை :

Shobika

வாங்கிய அனைத்து லாட்டரிகளுக்கும் பரிசு மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போன நபர்… 

naveen santhakumar