இந்தியா

மூன்றாம் பாலினத்தவருக்காக முதல் பல்கலைக்கழகம் – உ.பி.யில் உருவாகிறது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் கல்வி உள்பட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைவது என்பது சவாலாக உள்ளது. கல்வி துறையை பொருத்தவரை மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று தனியாக பள்ளிகளோ, கல்லூரிகளோ, பல்கலைக்கழகங்களோ இந்தியாவில் இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனால் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்துவருகிறது.

ALSO READ  ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்க முடியும்- யுஜிசி அறிவிப்பு..


இந்நிலையில், முதல் முறையாக உத்தர பிரதேசம் மாநிலம் குஷிநகரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கென அகில இந்திய மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கல்வி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பிலிருந்து முதுகலை பட்டப்படிப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பி.எச்.டி. எனப்படும் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு படிப்புகளும் இந்த பல்கலைக்கழக்கத்தில் பயிலலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி மாதம் 15-ம் தேதி இங்கு அனுமதிக்கப்படுவார்கள். பிப்ரவரி, மார்ச் மாதவாக்கில் இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என இந்த அறக்கட்டளையின் தலைவர் கிருஷ்ண மோகன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் குறையாத கொரோனா பாதிப்பு; அதிகரிக்கும் உயிர் பலி ! 

News Editor

மணிஷ் சிசோடியா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது..

Shanthi

‘யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்ககூடாது’  டிராக்டர் பேரணி குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!

News Editor