உலகம் சாதனையாளர்கள்

மானின் உருவப் பாதையில் 9 மணி நேர சைக்கிள் பயணம் செய்த நபர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மானின் உருவப் பாதையில் 9 மணி நேர சைக்கிள் பயணம் செய்த நபர்

லண்டனை சேர்ந்த 51 வயது நபர் 9 மணி நேரத்தில் சுமார் 127 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்தவர் அந்தோனி ஹோய்டி. 51 வயதான இவர் கிறிஸ்துமஸை கொண்டாட முடிவு செய்து சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி கூகுள் மேப்பில் பார்த்தால் மானின் உருவம் வருமாறு உள்ள இடங்களை தேர்வு செய்தார். அதன் வழியே சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

ALSO READ  அடடே…!!!! இந்த ஐடியா கூட நல்லாதான் இருக்கு….கல்வி கட்டணத்திற்கு பதில் தேங்காய்…..

தனது பயணத்தை லண்டன் ஹேமர்ஸ்மித் பகுதியில் தொடங்கி கிழக்கு லண்டன் பகுதி முழுவதும் சுற்றி யூஸ்டோன் சென்று முடித்தார். கிட்டத்தட்ட 9 மணி நேரத்தில் 127 கி.மீ தூரம் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் தேர்வு செய்த பாதை சிக்கல் நிறைந்தது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அவர் இச்சாதனையை படைத்துள்ளார்.

இதுகுறித்து அந்தோனி ஹோய்டி கூறுகையில். “இப்பயணத்தால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பயணத்தை முடிக்கும் வரை அதுகுறித்த பயம் இருந்தது” எனக் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

துபாயில் பாராட்டு வாங்கிய இந்தியர்:

naveen santhakumar

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Shanthi

சில மனிதர்கள் – சில நினைவுகள் பகுதி -10 (வரலாறு)

News Editor