இந்தியா

கொரோனா Hot Spot என்றால் என்ன..???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

 நியூ டெல்லி:-

நேற்று பிரதமர் நரேந்திர மோடி  தனது உரையில் ஹாட்ஸ்பாட் (Hot Spots) என்று அறிவிக்கப்படாத பகுதிகளில் ஏப்ரல் 20 க்கு பிறகு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.  

சரி, அது என்ன ஹாட்ஸ்பாட்??  ஒரு பகுதியை ஹாட்ஸ்பாட் என்று எவ்வாறு வரையறை செய்கிறார்கள் ??

இந்தியாவில் தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை 1189 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 350க்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். 

கடந்த சில மாதங்களாக அதிகமாக நாம் உபயோகித்தும் கேட்டும் வரும் ஒரு வார்த்தை கொரோனா (Covid-19). தற்போது அதிகமாக கேட்டு வரும் வார்த்தை ஹாட்ஸ்பாட். சரி, இந்த ஹாட்ஸ்பாட் என்றால் என்ன அது எவ்வாறு வகைப்படுத்துகிறார்கள்.

ALSO READ  மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள் கிடைக்கும்?? எவை கிடைக்காது??

ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆறு அல்லது அதற்கு மேல் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டால் அந்த பகுதி கொரோனா ஹாட்ஸ்பாட் (Corona Hotspot) என்று அறிவிக்கப்படும்.

ALSO READ  ஊரடங்கால் வருமானமின்றி தவித்த கூலித்தொழிலாளி தற்கொலை....

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் மக்கள் மருந்தகம், மருத்துவமனை, வங்கி, அத்தியாவசிய மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 

ஆனால் ஹாட்ஸ்பாட் என்று அறிவிக்கப்படும் பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மளிகை பொருட்கள் மருந்துக்கள், உணவு உட்பட அவர்களின் வீட்டிற்கே வழங்கப்படும்.

அதேபோல், இவ்வாறு ஹாட்ஸ்பாட் என்று அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அந்த பகுதியின் சுகாதாரம் உறுதி செய்யப்படும். அதேபோல அரசு அந்த பகுதியில் உள்ள மக்களின் தேவைகள் அறிக்கை சென்று அளிப்பதாக உறுதி செய்யப்படும்.

அவர் ஒரு பகுதியை ஹாட்ஸ்பாட் என்று அறிவிக்க படுவதன் நோக்கம் வைரஸ் தொற்றானது சமூக தொற்றாக மாறுவதை தடுப்பதற்காக தான்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Cognizant அதிரடி: 18,000 பேர் வேலை இழப்பு…

naveen santhakumar

மனித விலங்குகளின் அட்டகாசம்: அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற கொடூரம்…

naveen santhakumar

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு பிப்ரவரி 1ம் தேதி தூக்கு

Admin