இந்தியா

பச்சை மண்டலத்தில் அனுமதிக்கப்பட்டவை மற்றும் பற்றிய மண்டலத்தில் அனுமதிக்கப்படாதவை..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

கொரோனா பரவலை  கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மத்திய அரசாங்கம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று மூன்று மண்டலங்களாக பிரித்து உள்ளது.

இந்தியா முழுவதும் மொத்தம் 319 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வெளியிட்டுள்ள தகவலின்படி, குறிப்பிட்ட பகுதியில் 21 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையெனில் பச்சை நிற மண்டலம் ஆகும்.

இதற்கு முன்பு இந்த கணக்கீடு 28 நாட்களாக இருந்தது.

 பச்சை மண்டலத்தில் அனுமதிக்கப்பட்டவை:-

பச்சை மண்டலத்தில் வாகனங்கள் இயக்குவதற்கு எந்தவித முன் அனுமதியும் பெற தேவையில்லை.

சிவப்பு ஆரஞ்சு போன்ற மண்டலங்களை போன்று பச்சை மண்டலத்தில் அதிக கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

நாடு முழுவதும் தடை தடை செய்யப்பட்டவை தவிர மற்ற அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது அதேசமயம் 50 சதவீதம் பேர் இந்துக்கள் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  புதுச்சேரியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை; ஆளுநர் அறிவிப்பு !

மதுபான கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ஆனால் அதேவேளையில் மாநில அரசுகளின் முடிவிற்கு இது விடப்பட்டுள்ளது.

மதுபானங்கள், சிகரெட், புகையிலை பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்றும் அனைவரும் 6 அடி தூரம் சமூக விலகலை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பச்சை மண்டலத்தில் அனுமதிக்கப்படாதவை:-

பச்சை மண்டலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

இதேபோல உடற்பயிற்சி கூடங்கள் விளையாட்டு அரங்கங்கள் தியேட்டர்கள் மால்கள் பிற வணிக வளாகங்கள் உள்ளிட்டவையும் அனுமதிக்கப்படவில்லை.

பச்சை மண்டலத்திலும் வழிபாட்டுத்தலங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை இதேபோல மதம் சம்பந்தப்பட்ட எந்த வித நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

பொதுக்கூட்டங்கள் நடத்த பொதுமக்கள் கூடவோ அனுமதி இல்லை.

பொதுமக்கள் அனைவரும் நடமாடுவதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை ஆனால் அதே வேளையில் கர்ப்பிணிகள் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ALSO READ  ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்த தொழிலாளர்கள் ஊர் திரும்ப வழியின்றி பாலத்தின் அடியில் தங்கியுள்ள அவலம்....

தமிழ்நாட்டில் பச்சை மண்டலம்:-

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மட்டுமே இதுவரை பச்சை மண்டலமாக திகழ்கிறது.

தமிழக அரசின் கணக்கின் படி, கோவைக்கு வரும் 21ஆம் தேதியுடனும், ஈரோட்டிற்கு வரும் 14ஆம் தேதியுடனும் 28 நாட்கள் கணக்கு முடிகிறது. அதற்குள் புதிதாக வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனில் இந்த மாவட்டங்கள் பச்சை மண்டலங்களில் சேர்க்கப்படும். 

ஈரோட்டிற்கு அருகே இருக்கும் திருப்பூர் தொடர்ந்து சிவப்பு மண்டலமாக நீடிக்கிறது.  ஈரோடு பதிதாக கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி புதிதாக கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் அன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சேலம் மாவட்டத்தின் நிலை மறுஆய்விற்கு உட்படுத்தப்படும். நாடு முழுவதும் ஏற்படும் கொரோனா பாதிப்பிற்கு ஏற்ப வாரந்தோறும் மூன்று நிற மண்டலங்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Прогнозы И Ставки На Спорт Сегодня От Команды Профессионалов На Спорт-экспрес

Shobika

Güvenilir rulet siteleri

Shobika

Applying IFRS Accounting for cloud computing costs July 2021 Global

Shobika